Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச வருகைக்கு எதிராக பாரதிராஜா அறிக்கை:பிழைப்பு வாதிகள் மட்டும்

Bharathirajaநாளை 26 ஆம் திகதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த நிகழ்வில் இனக்கொலையாளியும் இலங்கை அரச பயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜபக்சவிற்கு இணையான இனக்கொலையாளியான நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும்ப்போது கைகட்டி அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பிழைப்புவாதிகள் அனைவரும் இப்போது தமது பிழைப்புவாத நலன்களுக்காக அறிக்கைவிட ஆரம்பித்துள்ளனர். ஒரு இனக்கொலையாளியை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் பிழைப்பு நடத்தும் இவர்கள் இன்று தமிழ் மக்களுக்குத் தங்களை நிர்வாணமாகக்காட்டி நிற்கின்றனர். இந்த வகையில் புலம்பெயர் நாடுகளில் தங்களுக்கு வியாபாரம் தேட முற்படும் அரசியல்வாதிகளும் சினிமாக் காரர்களும் ஆரம்பித்துவிட்டனர். புலிகளின் தலைவரைப்பிடித்து இந்தியாவிற்குக்கொண்டுவந்து தூக்கில் போடுங்கள் என்று மத்திய அரசைக் கோரிய ஜெயலலிதாவில் ஆரம்பித்து வை.கோ உட்பட பாரதிராஜா மற்றும் கௌதம் பொன்ற சினிமாக்காரர்கள் வரை பிழைப்பிற்காக இந்தப்பிரச்சனையக் கையிலெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்திய பெருநாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி இந்த நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பதவியேற்கும் நிகழ்ச்சியில் எங்களின் மகிழ்வை குலைக்கும் வகையிலும், இந்த அரசின் மீது நம்பிக்கையின்மையை -ஏற்படுத்தும் வகையிலும் லட்சக்கணக்கா எங்கள் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவித்த இனப்படுகொலையாளன் ராஜபக்ஷேவை சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது கண்டனத்திற்குரியது. முதல் நிகழ்ச்சியிலேயே ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியும், அவமதிக்கும் வகையிலும் சர்வதேச விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் ஒரு போர் குற்றவாளியை அழைத்திருப்பது வேதனை அளிக்கிறது.

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

மோடி மகிந்தவை அழைத்து கௌரவிப்பதன் பின்புலம்…

Exit mobile version