ஒடுக்கப்படும் தமிழர்களின் ஒருபகுதி ராஜபக்சவிடம் மண்டியிட இன்னொரு பகுதி ராஜபக்சவின் எஜமானர்களிடம் மண்டியிடுகிறது. ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு ஒபாமாவைச் சந்திக்க வெள்ளை மாளிகையிடம் அனுமதி கோரியுள்ளது.
அமரிக்காவின் ஆளில்லா விமானங்கள் அப்பாவிக் குழந்தைகள் இரத்தமும் சதையுமாகக் கொன்று குவிப்பது குறித்து உலகில் மனித்த்தை மதிப்பவர்கள் பேசுகிறார்கள். மத்திய கிழக்கை மனித இரத்தத்தால் சிவப்பாக்கிகொண்டிருக்கிறது அமரிக்க அரசு. ஆப்கானின் அரசியல் நகர்வுகளுக்குள் ஆயிரம் ஆயிரம் அப்பாவிகள் நசுங்கிச் செத்துப்போகிறார்கள். தேன் சூடனில் விடுதலை பெற்றுத் தருகிறோம் என்று பிரித்துக்கொடுத்து மனிதப் பிணங்களை நடுத்தெருவில் வீசியெறிகிறது ஒபாமா நிர்வாகம். இலங்கையில் இனப்படுகொலையை செய்மதி ஊடாக பார்த்து ரசித்தவர்கள்கள். செய்மதித் தகவல்களை இனப்படுகொலை அரசிற்கு அறிவித்தவர்கள். மக்களை கொன்றுபோடுமாறு ராஜபக்சவை தட்டிக்கொடுத்தது அமரிக்க அரசு.
இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்து நான்கு வருட்ங்களின் பின்னரும் மனிதாபிமானிகளையும், ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் தூர விலகிச் செல்லும்படி ஐந்தாம் அழிக்கும் அரசுகளின் ஐந்தாம் படைபோன்று செயற்படுகின்றன குறுந்தேசிய புலம் பெயர் அமைப்புக்கள். அதில் குறிப்பிடத்தக்க ஐந்தாம்படை அமைப்பே ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு.
2008ம் ஆண்டு ஒபாமா அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது, அமெரிக்கா இனி உலகில் இனப்படுகொலையை தடுப்பதைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு மோதல்களிலும் ஈடுபடப்போவதில்லை என்று கூறினார். நாங்கள் அவருக்கு இனப்படுகொலை தொடந்தும் வடகிழக்கில் நடைபெறுவதாக கூறினோம்.
நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழர்களுக்கு ஜனாதிபதி ஒபாமாவிடமிருந்து உதவிகள் கிடைக்குமென்று காத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் தற்போது வரை எதுவும் கிடைக்கவில்லை. நாம் தற்போது கூட அவரிடம் இருந்து உதவி கிடைக்கும் என்று காத்துக்கொடிருக்கின்றோம்.
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செய்கைகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வரையறுக்கப்பட்ட இனப்படுகொலையின் அம்சங்களை கொண்டிருப்பதாகவே உள்ளது. இது தமிழர்களின் நிலைமையின் தீவிரத்தை ஒபாமா அவர்களுக்க உணத்தியிருக்கும் என்று நம்புகின்றோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இன்படுகொலைகளை பின்வருமாறு பட்டியல் இட்டு கூறியுள்ளோம்.
1. இலங்கை அரசு தமிழர்களை அவர்களின் பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றி வருகின்றது.
2. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை, வேண்டுமென்றே போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு பாவித்து பல ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து இனப்படுகொலை செய்துள்ளது.
3. 90 ஆயிரம் பெண்களை விதவைகள் ஆக்கியதோடு அவர்களை இலங்கை இராணுவத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுவும் ஐக்கிய நாடுகளினால் வரையறுக்கப்பட்ட இனவழிப்பின் அம்சமேயாகும்.
4. இளம் தமிழ் பெண்களை தென் பகுதிக்கு கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடவைத்து, அடிமைப்படுத்திவைத்து அவர்களின் எதிர்காலத்தை சிதைப்பதோடு புதிய தமிழச் சமுதாயம் உருவாகாமலும் தடுக்கப்படுகின்றனர். இதுவும் ஐக்கிய நாடுகளினால் வரையறுக்கப்பட்ட இனவழிப்பின் அம்சமேயாகும்.
ஜனாதிபதி ஒபாமா அவர்கள் தமிழ் மக்கள், அவர்களது பூர்வீகமான நிலங்களில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவதற்கு உதவி செய்து தருவார் என்று நம்பிகையுடன் இருக்கின்றோம். இவ்வாறு தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு தெரிவித்துள்ளது.