Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராகுல்காந்தி பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் அனுமதி!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பேர் கேரி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் வாகனத்தை ஏற்றியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க ராகுல்காந்தி லக்னோ செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்தார்.  அப்போது அவரை தடுத்து நிறுத்தினார்கள்.பின்னர் அவரை லக்னோ விமானநிலையம் வந்தார் அங்கே ராணுவத்தினர் அவரை வழி மறித்து தடுத்து நிறுத்த அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

ராகுல் போராட்டம் நடத்தியதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள லக்னோ சாலைகள் ஸ்தம்பிக்கத் துவங்கின.  இதன் பின்னர் ராகுல்காந்தியை செல்ல அனுமதித்தனர். இதனிடையே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ப்ரியங்காகாந்தியையும் போலீசார் விடுதலை செய்தனர். ராகுல்காந்தி சீதாபூருக்கு வருகை தர  ப்ரியங்காந்தி, ராகுல்காந்தி, பஞ்சாப், சட்டீஸ்கர் முதல்வர் என நால்வரும் விவசாயிகளைச் சந்திக்க செல்வார்கள் என்று தெரிகிறது. ஆனால். உத்தரபிரதேச மாநிலத்தில் அரசியல் ரிதியாக பதட்டம் எழுந்துள்ளது.

Exit mobile version