Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரவிராஜ் கொலையில் ஸ்கொட்லண் யார்டின் தலையீடு :மேலும் ஆதாரங்கள்

Karuna-Douglas-mahindhaமுன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரின் கொலை தொடர்பான விசாரணைகள் இப்போது மீண்டும் நடைபெற்றுவரும் நிலையில் ஸ்கொட்லண்ட் யார்ட் இற்கு இக் கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இனியொருவின் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. :

ரவிராஜ் படுகொலை – ஸ்கொடலண்ட் யார்ட் இன் பங்கு என்ன?
சந்தேகத்தை உறுதிப்படுத்தும் மேலதிக ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இலங்கையில் 2006 ஆம் ஆண்டு அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய ரோபேர்ட் ஓ பிளேக் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், ரவிராஜ் எம்.பி ஐக் கொலையை கருணா குழுவே திட்டமிட்டுச் மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். (Wikileaks cable : Classified By: Ambassador Robert O. Blake, Jr., for reasons 1.4(b, d)
Abductions and Killings
¶6. (S) The Karuna group is probably the most active Sri
Lankan paramilitary in abductions and extrajudicial killings.
On March 20, former Tamil MP and legal expert Dr. K.
Vigneswaran (strictly protect) confided to PolOff that even
MPs fear that the GSL will use Karuna to assassinate them.
Colombo-area Tamil MP and Chairman of the Civil Monitoring
Commission Mano Ganesan echoed this anxiety to us on March
¶29. A number of other MPs, Muslims as well as Tamils, have
told us privately that they fear for their lives.
Vigneswaran stated that he believed Karuna set up the
assassination of Tamil MP Joseph Pararajasingham on Christmas
Day 2005 (ref G) with the help of EPDP leader Devananda.
Vigneswaran was also positive that Karuna cadres were
employed in the killing in Colombo of popular Tamil MP
Nadarajah Raviraj on November 10, 2006 (ref F). )
அவ்வேளையில் ஸ்கொடலண்ட் யார்ட் ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணையை நடத்திக்கொண்டிருந்தது. விக்கிலீக்சில் குறிப்பிட்ட எந்த நபர்களும் விசாரணை செய்யப்பட்டதற்கான ஆதரங்களை ஸ்கொட்லண்ட் யார்ட் வெளியிடவில்லை. 2008 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்குள் போலிக் கடவுச் சீட்டில் நுளைந்த கருணா மீது பிரித்தானியத் தமிழர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கருணா கைது செய்யப்பட்டார்.
ஸ்கொட்லண்ட் யார்ட் இன் பிடியில் சிக்கினார். அதே ஆண்டு கருணா மீது எந்தக் குற்றங்களும் ஆதாரபூர்வமாக இல்லை என ஸ்கொட்லண்ட் யார்ட் கருணாவை விடுதலை செய்தது. ஸ்கொடலண்ட் யார்ட் இனால் விசாரணை செய்யப்பட்டுக்கொண்டிர்ந்த கொலை வழக்கில் ஆதாரபூர்வ சந்தக நபரை விடுதலை செய்தமை கொலை தொடர்பான சந்தேகங்களை மேலும் வலுவாக்கிவருகிறது.
HWW on Karuna’ release :

http://articles.economictimes.indiatimes.com/2008-07-04/news/28437779_1_hrw-brad-adams-ltte

Exit mobile version