Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யூரேனியம், பிரஞ்சு ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அடிப்படைவாதம் : கொல்லப்படும் மாலி மக்கள்

exclusiveislamஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வளர்ப்பதன் ஊடாக வன்முறையைத் தூண்டியவர்களே ஐரோப்பிய அமரிக்க ஏகாதிபத்தியங்கள் தான். ஆப்கானிஸ்தான், மத்தியகிழக்கு நாடுகள் போன்ற இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவின் உள்ளேயேயும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் வளர்ச்சிக்கு மேற்கு ஏகாதிபத்தியங்கள் கணிசமான பங்கு வகித்திருக்கின்றன.
அல்ஜீரியா. மரோக்கோ, துனிசியா போன்ற வட ஆபிரிக்க மக்ரேபியன் நாடுகளில் இஸ்லாமிய அடிப்படை வாதம் வளர்ச்சியடைய 80 களின் இறுதியில் பிரஞ்சு உளவுத்துறை பெரும் பணத்தை வழங்கியது. அல்ஜீரிய அரசிற்கு எதிராஜ ஜீ.ஐ.ஏ என்ற்க இஸ்லாமிய வன்முறைக்குழுவிற்கு பிரஞ்சு அரசு பணக்கொடுப்பனவுகளை வழங்கியிருந்தமை 90 நடுப்பகுகிதில் வெளிச்சத்திற்கு வந்தது.
மாலியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும் என ‘சோசலிசக் கட்சி’ பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந் கடந்தவாரம் தொலைக்காட்சியில் சூழுரைத்தார். வடக்கு மாலியில் இஸ்லாமியக் ஆயுதக் குழுக்கள் அழிக்கப்ப்படும் வரைக்கும் தாமது படைகள் போராடும் என்றார்.
அல்ஜீரியாவின் இயற்கை எரிவாயுவின் மீது பிரான்சிற்கு ஏற்பட்ட பற்று அந்த நாட்டில் ஆயிரக்கணக்கன மக்களைக் கொன்றொழித்தது.
பிரான்சின் மின் சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக அணு மின் உற்பத்தியே பெரும் பங்கு வகிக்கின்றது. அணு மின் உற்பத்திக்குத் தேவையான யூரேனியம் வடக்கு மாலியில் இன்னும் சுரண்டபடாமல் குவிந்து கிடக்கின்றது. வடக்கு மாலியும் கிழக்கு நைஜீரும் இணைந்த எல்லைப்பகுதியில் உலகின் மூன்றாவது பெரிய யூரேனியப் படுக்கைகள் காணப்படுகின்றன.
நைஜீர் நாட்டின் யுரேனிய அகழ்வின் ஒரு பகுதியை இப்போது சீன பெற்றுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுன் உரிமங்களைப் பெற்றுள்ளன.
சீனா $115 மில்லியன் ஒப்பந்தத்தை மாலி அரசுடன் மேற்கொண்டிருந்தது. சீன அரசு நீர் மின் உற்பத்திக்கான நீர்தடுப்புத் திட்டத்தை வடக்கு மாலியில் இஸ்லாமி வன்முறைக் குழுக்களின் பகுதியில் உருவாக்கியிருந்தது.
சீனா, தொழில், சுகாதாரம், விவசாயம், கல்வி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
இன்று மாலி நாட்டை விமானக் குண்டுகளால் துளைத்த பிரஞ்சுப் படைகள், 2000 வரையான தரைப்படைகளை அனுப்பி வைத்துள்ளன. அவை இஸ்லாமிய அடிப்படை வாத்த்திற்கு எதிராகப் போராடி வெற்றி கொள்ளப்போவதாக பிரஞ்சு சனாதிபதி கூறுகிறார்.
இப்போது இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறைகளைத் தோற்றுவ்யித்தவர்களும் அதனை அழிக்கிறோம் என்று அங்குள்ள வளங்களை வட்டமிடும் திருடர்களும் யார் என்பது வெளிப்படை.
நாற்பது வருடங்களாக நேரடிக் காலனியாதிக்கத்தின் பின்னரும் மாலியைச் சுரண்டிய பிரஞ்சு அரசு அந்த நாட்டின் மீதான தனது ஏகபோக உரிமைக்காக மக்களை மந்தைகள் போல கொன்று குவிக்கின்றது.
பிரஞ்சு ஆதரவுப் படைகளால் கொல்லப்படுவோர் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்(HRW) கொலைகளை அவதானமாக மேற்கொள்ளுங்கள் என்று அறிக்கை விடுத்துள்ளது. உலகில் போராடும் அமைப்புக்கள் மாலியில் இராணுவத்தின் கொலைகள் குறித்து பேசிவிடக் கூடாது என்பதற்காக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்துடைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதும், குழந்தகள் மாலி இடைக்கால அரசின் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதைக் கண்டிப்பதாகவும். வடக்கு மாலியில் இறுதி இஸ்லாமிய நிலைகளை அழிக்கும் போது சிவிலியன் உயிரிழப்புக்களைக் குறைத்துக்கொள்ளுமாறும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கைவிடுத்துள்ளது.

Exit mobile version