Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யூடியூபைப் பார்த்து மனைவிக்கு பிரசவம் குழந்தை பலி-மனைவி கவலைக்கிடம்!

நவீன அறிவியல் வளர்ச்சி வாழ்க்கையில் உருவாக்கும் வசதிகளை புறந்தள்ளி  பழைய கால வாழ்க்கையை வாழ வேண்டும் என தமிழ் தேசியம் போதிக்கிறது. சீமான் போன்றோர் ஆடுமாடு மேய்க்க வேண்டும் என்று தமிழ் தேசியம் பேசி வரும் நிலையில் அரக்கோணத்தையடுத்த நெடும்புலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் இவர் நாம் தமிழர் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இவர் இயற்கை முறையில் உற்பத்தியாவது என்று சொல்லப்படும் மரச்செக்கு எண்ணெய் விற்பனை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில்  கர்ப்பமுற்ற அவரது மனைவிக்கு கடந்த 13-ஆம் தேதி பிரசவம் நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் லோகநாதன் யூ-டியூபை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்தபோது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதையடுத்து அவரது மனைவி மயங்கிய நிலையில், அவரை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். அங்கு அவரது மனைவி சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version