
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னை நாள் மாணவர்களின் ஒன்று கூடல் ஒன்று இன்று (19.03.2011) பிரித்தானியாவின் சரே பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைகம் ஆரம்பிக்கப்பட்ட போது மாணவர்களாகத் தெரிவான சிலரின் முன் முயற்சியின் அடிப்படையில் உருவான ஒன்று கூடலில் மாணவர் சங்க்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இன்று கல்விகற்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கான உதவித்திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் இக்குழுவினர் செயற்படத் தீர்மானித்துள்ளனர். பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் சார்ந்த மாணவர்களும் ஏனையோரும் மிக நீண்ட காலத்தின் பின்னான இம் முயற்சிக்கு ஆதரவும் பங்களிப்பும் வழங்குமாறு அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.