Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தை அமைக்க இந்தியா முடிவு செய்தது ஏன்?

 இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில்,யாழ்ப்பாணத்தில் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதென்ற இந்தியாவின் தீர்மானமானது தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.

யாழ்.குடாநாட்டில் 5 பிரதான வீதிகளை அகலமாக்கும் பணியில் சீன ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன், மின்சார விநியோக நடவடிக்கைகளிலும் சீன ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம்காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்பலாலி வீதி,யாழ்ப்பாணம்மானிப்பாய் வீதி,யாழ்ப்பாணம்  பருத்தித்துறை வீதி,யாழ்ப்பாணம்ஊர்காவற்றுறை வீதி ஆகிய பிரதான வீதிகளே சீனர்களால் திருத்தப்படுவதாக அண்மைய செய்தியொன்று தெரிவிக்கிறது. அத்துடன், சுன்னாகத்தில் மின்சார உற்பத்தியிலும் சீனர்கள்ஈடுபட்டுள்ளனர்.இந்தியாவின் கோடிப்புறமாக இலங்கையின் வட பகுதியில் பாரியளவில் இடம்பெறும் சீனாவின் செயல்திட்டங்கள் புதுடில்லிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக அமைந்துள்ளது.

2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் உள்சார் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துவதற்கு சீனர்களை அழைப்பதென்ற தீர்மானம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை,இந்திய மற்றும் மேற்குலகின் செல்வாக்கிற்குப் பதிலீடாகவே இதனை மேற்கொண்டிருப்பதாக த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வெள்ளிக் கிழமை தெரிவித்துள்ளது.இதனையடுத்து புதுடில்லி கொழும்புக்கு இந்த விடயம் தொடர்பாக கூறியுள்ளது.

அதாவது இலங்கையின் வட பகுதியானது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான கேந்திரப் பகுதியெனவும் அதனால் தனது சொந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய தேவையிருப்பதாக டில்லி கொழும்புக்கு கூறியுள்ளது. அதனால் வடக்கில் ரயில் பாதையை மீள நிர்மாணிக்கும் பணியை ராஜபக்ஷ இந்தியாவிடம் ஒப்படைத்தார். இதற்கு 425 மில்லியன் டொலரைச் செலவிடுவதென இந்தியா உறுதியளித்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சி,முல்லைத்தீவில் தமிழ் அகதிகளுக்கான வீடுகளையும் இந்தியா நிர்மாணிக்கவுள்ளது. அத்துடன், வன்னிப் பிராந்தியத்தில் விவசாயிகளுக்கு நீர்வசதி,விதைபொருட்கள்,விவசாய உபகரணங்களையும் வழங்கவுள்ளது.

Exit mobile version