சேலம் மாவட்ட கருப்பூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 31). இவர் இன்று காலை சேலம் அஸ்தம்பட்டி
அருகில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடத்திற்கு வந்தார். அப்போது அவர் 5 லிட்டர் மண்எண்ணையையும் எடுத்து வந்து இருந்தார்.
பிறகு அவர் கோர்ட்டில் உள்ள நீதிதேவதை சிலை முன்பு நின்று கொண்டு கொடும்பாவி ராஜபக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்பது போன்ற கோஷங்களை முழங்கினார். பின்னர் தன் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொள்ள முயற்சித்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரளாக வந்து வெற்றிவேல் வைத்து இருந்த மண்எண்ணை கேனை பறித்து கொண்டனர்.
பின்னர் வெற்றிவேலை பிடித்து சேலம் அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இவரை அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கன்னையன் மற்றும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
நரேந்திர மோடி ராஜபக்ச போன்ற பாசிஸ்டுக்கள் மனித குலத்தின் அடிப்படை விரோதிகள் என்பதையும் இவர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடுவதே மக்கள் முன்னால் உள்ள ஒரே வழி என்பதையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வெற்றிவேல் கூறியதாவது:–
நான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வரக்கூடாது. அவர் இந்தியா வருவது என்னை போல் பலருக்கும் பிடிக்கவில்லை, என் எதிர்ப்பை தெரிவிக்க தீக்குளிக்க முயற்சித்தேன்.