Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடியை விட்டால் இனி வேறு வழியில்லை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். மக்கள் வாக்காளிக்காமல் கிடைத்த முதல்வர் பதவி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என  வழக்குகளில் சிக்கினால் மீண்டு எழுந்துவரவே முடியாத அளவுக்கு முறைகேடுகளும் ஊழல்களும் மலிந்துள்ள இந்த ஆட்சியில்,  சிறையில் இருந்து வந்துள்ள சசிகலாவின் அச்சுறுத்தல் காரணமான தன்னையும் கட்சியையும் காப்பாற்ற மோடியின் உதவி எடப்பாடி பழனிசாமிக்கு தேவைப்படுகிறது.

நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியை  வரவேற்றுப் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு வைத்த புகழாராம் அதையே எடுத்துக் காட்டியது.

என்  அழைப்பை ஏற்று தமிழகம் வந்த பிரதமர் மோடிஜி என்று பல முறை குறிப்பிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  மோடியை விட்டால் அவருக்கு இனி வேறு கதியில்லை என்பதையே அது காட்டியது. நிச்சயம் வெல்வோம் என்ற உறுதிப்பாடு அவரிடம் இல்லாததும், தோற்றால் தன்னை பிரதமர் மோடி காப்பாற்றியே ஆக வேண்டும் என்பது போலவும் இருந்தது. இந்தியாவிலேயே எந்த மாநிலக் கட்சிகளும் பாஜகவை பயன்படுத்திக் கொண்டது இல்லை. அதனால் பாஜகவிடம்  இருந்து பல கட்சிகள் விலகத் துவங்கி விட்டன. ஆனால், நேரம் பார்த்து நெருங்கும் எடப்பாடி பழனிசாமி பாஜகவை எவ்வளவு பயன்படித்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு பிரதிபலனாக அதிமுகவின் ஒரு கட்டமைப்பை பாஜகவுக்கு நிச்சயம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றோடு போக மாட்டார்கள்.

அரசு நிகழ்ச்சி முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியோடு தனியாக ஆலோசனை செய்த பிரதமர் மோடி பன்னீர்செல்வத்தை இம்முறை கண்டு கொள்ளவில்லை. காரணம் அவரால் தான் விரும்பிய படியான லாபங்களை தமிழகத்தில் ஈட்டிக் கொடுக்க முடியவில்லை. ஆனால், மத்திய அரசு சொல்லும் இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருப்பதும்.மிக முக்கியமான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களை பாஜகவின் கூட்டணி கட்சிகள் பலதும் எதித்துள்ள நிலையிலும்  எடப்பாடி பழனிசாமி எந்த விதமான முரண்பட்ட கருத்துக்களையும் கூறாமல் இந்த இரு சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு அதை அமல் படுத்துவதில் காட்டும் திவீரத்தையும் கண்டு மோடியே எடப்பாடி பழனிசாமியை பாராட்டியிருக்கிறார்.

இப்போது பாஜக அதிமுக கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல தேர்தலுக்குப் பின்னர்  தன் மீது எடுக்கப்படப்போகும் நடவடிக்கைகளில் இருந்து மோடி தன்னை காப்பாற்றுவார் என்று எடப்பாடி பழனிசாமி நம்புவதால் இப்போதைக்கு பழனிசாமிக்கு மோடியை விட்டால் வேறு வழியில்லை!

Exit mobile version