அடுத்த பொதுத் தேர்தலில் தே.ஜ. கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்கக் கூடாது என பீகார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம், நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்பு விழாவில், பா.ஜ தலைவர் நிதின் கட்கரியை பீகார் முதல்வரும் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். அப்போது, ‘‘அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ளன. அதனால் தே.ஜ. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவித்தால் நன்றாக இருக்கும். ஆனால் அப்பதவிக்கு நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்கக் கூடாது’’ என நிதின்கட்கரியிடம் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு!