மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மம்தா பானர்ஜியின் கட்சியில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழகத்தைப் போல மேற்குவங்க மாநிலத்திலும் வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் திவீரம் காட்டுகின்றன. மேற்குவங்க மாநிலத்தில் பாஜக எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். அவரோடு கட்சியின் சில முக்கிய பிரமுகர்களும் சென்றார்கள். இப்போது மேற்குவங்க மாநில இளைஞர் நலம், மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் தன் ராஜிநாமா கடிதத்தை மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் அனுப்பியுள்ளார். அவர் விரைவில் டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்து பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்குவங்க அரசியலில், இடதுசாரிகள் பலவீனமடைந்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளதும். இப்போது மம்தா பானர்ஜியின் கட்சி குலைக்கப்படுவதும் பல கேள்விகளை எழுப்பியிருந்தாலும், நடைபெற இருக்கும் தேர்தலில் பாஜக வென்றால் அது மேற்கு வங்க அரசியல் போக்கையே தலைகீழாக மாற்றி விடும்.