Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மாற்றியது மத்திய அரசு!

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை பார்வையிட  வந்த பிரதமர் மோடியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாக பாஜகவினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நீண்ட விளக்கத்தை மம்தா பானர்ஜி கொடுத்தார்.நான் ஏற்கனவே புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். பிரதமரின் பயணம் திடீரென திட்டமிட்டது. அதனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் அவருக்குச் சொல்லி விட்டுத்தான் புயல் சேதத்தை பார்வையிடச் சென்றேன் என்றார். ஆனால் இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் தலைச் செயலாளரை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க தலைமைட் செயலாளர்  அலபன் பண்டாபாத்யாயாவை மத்திய பணியாளர் பயிற்சித்துறைக்கு மே 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

மம்தா பானர்ஜி பிரதமரை அவமதித்து விட்டதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில் இன்று மம்தா பானர்ஜி “பாஜக என்னிடம் படு தோல்வியடைந்துள்ளாதால் என்னை அவமானப்படுத்த நினைக்கிறது.ஆனால் மாநில நலனுக்காக நான் மோடியின் காலை வேண்டுமென்றாலும் பிடிக்கிறேன். என் மாநில மக்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குகள்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version