அமரிக்காவினதும், இஸ்ரேலினதும், நேட்டோவினதும் மக்கள் மீதான போர் தொடரத்தான் போகின்றது. நாங்கள், குறிப்பாக அமரிக்க மக்கள் அவர்களை நிறுத்தவேண்டும். லத்தீன் அமரிக்க நாட்டு மக்களின் கௌவரவத்திற்கும், சமாதானத்திற்கும், நீதிக்குமான குரல்கள் ஒங்கி ஒலிக்கின்றன. 84 வீதமான உலக மக்கள் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள். ஆசியாவில் தாம் இனிமேலும் மேற்கு நாடுகளின் அடிமைகள் அல்ல என உணருகிறார்கள். இவ்வாறு ஐரோப்பியப் பாரளுமன்றத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சுய நிர்ணய உரிமை, மக்கள் விடுதலை, ஜனநாயகம் என்ற கருத்தரங்கில் உரையாற்றும் வேளையில் சிந்தியா மக்கீனி தெரிவித்தர். நீதிக்கும் சமாதனத்திற்குமான அமரிக்க மக்கள் இயக்கத்தின் சார்பில் கலந்துகொண்டமக்கீனி, பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார். அண்மையில் சிரியாவிற்குச் சென்றுவந்தவர். சிரியா மீதான அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக உறுதியாகக் குரல்கொடுப்பவர். IBON international என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மக்கீனி ஆரம்பப் பேச்சாளர்.
மேலதிக தகவல்கள்:
http://en.wikipedia.org/wiki/Cynthia_McKinney