Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேகதாது – அனைத்துக் கட்சிக் கூட்டம்!

கர்நாடக மாநிலத்தில் மேகதாட்டு என்னும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. ஏற்கனவே தண்ணீர் தாவாவில் தமிழக உரிமைகளை கர்நாடகம் அரசியல் செய்து வரும் நிலையில், மேதாட்டு என்னும் இடத்தில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது பெருமளவு குறைந்து விடும். ஆனால், அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

தமிழக முதல்- அமைச்சர்  பிரதமரை  நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும்,  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில்  ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும் கர்நாடக மாநிலமுதல்வருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்த  சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்  தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில், வருகிற 12-7-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்  நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும்  முதலமைச்சர்  அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Exit mobile version