காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த அணை கட்டப்படக்கூடாது இது கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வருகிற தண்ணீரும் நின்று விடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில் இது பற்றி பிரதமர் மோடியிடம் நேரடியாகவே தமிழக முதல்வர் முறையிட்டிருந்தார்.
நேற்று தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகள் தலைமையிலும் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் கர்நாடக அரசின் முயற்சிகளை சட்ட ரீதியாகவும் முறியடிப்போம் என்று மூன்று தீர்மானங்களை நிறைவேற்றி தமிழக அரசு அறிவித்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நாங்கள் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்துள்ளார். “மேகதாட்டுவில் அணை கட்ட உடனே மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக முதல்வர் முன் வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா,
“தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் பற்றியும் பேச விரும்பவில்லை. மத்திய அரசிடம் மனுக் கொடுத்திருக்கிறோம். விரைவில் அணை கட்டுமானப்பணியை துவங்குவோம்” என்றார்.
பின்னர் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் கஜேந்திர சிங் “இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்வோம்” என்றார்.
காவிரி நீரை தடுப்பது கர்நாடகா பாதிக்கப்படுவது தமிழ்நாடு. ஆனால், ஏதோ இரு மாநிலங்களும் பாதிக்கப்படுவது போன்ற மாயத்தோற்றத்தை ஒன்றிய அரசு உருவாக்க நினைப்பதன் மூலம் அணை கட்ட பாஜக அரசு என்பதால் ஆதரவாக இருப்பதாகவே தெரிகிறது.