மு.வரதராசுவின் வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ் கல்வி ,போராடும் மக்கள்- ஒரு பார்வை.
“
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியனய் கலைகளிள்
உள்;ளம் ஈடுபட்டென்ரும் நடப்பவர்-பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவர்”
தோட்டதொழிலாளியாக,தொழிற்சங்கவாதியாக,ஆய்வாளனாக,களப்பணியாளனாக,தலைவனாக,போராளியாக வாழ்ந்துவளர்கின்ர மலேசிய எழுத்தாளன் முருகைய்யன் வரதராசுவின் இந்த படைப்பானது ரோமாபுரியின் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் பிடில் வாசிகிகும் நவீனகாலத்து நாயகர்களான பம்மாத்து தலைமைகளுக்கு சவாலாக காணப்படுகின்றது.
மலேசியா பற்றியும் மலேசியா வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றியும் ஒருவிதமான மாயப்பார்வையினையே எமக்குக் காட்டப்பட்டுவருகின்றது. இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர்கள் பற்றியும் சில பிற்போக்கு அரசியல் தலைமைகள் மிகைப் படுத்தி காண்பிக்கும் ஒரு நிலையினை காணலாம்.மலேசியா பற்றிய சரியான ஒரு பார்வையினை செலுத்த இந்த ஆய்வு நூல் சிறந்த படைப்பாக காணப்படுகின்றது.
மலேசிய தமிழ் பள்ளிகளின் வரலாறும் இன்றைய நிலையும், புறக்கணிக்கப்பட்ட பிளமிங்டன் தோட்ட தமிழ்ப்பள்ளி, அவலத்தின் உச்சம் கங்கார்பூலா தமிழ்பள்ளி, மலேசியத்தமிழ்ப்பள்ளிகளின் நெஞ்சில்பரவும் சாதிநஞ்சு,பிழைப்புவாதிகளின் கூடாரம் மலாய்பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துரை,மலேசிய தமிழ்ப்பள்ளி பட்டியள் என்பவற்றுடன நூலாசிரியரின முன்னுரையும் வாழ்க்கைக் குறிப்புகள் சிலவும் சி.விசயகுமாரின் கருத்துரையும் கழகம் பதிப்பகத்தாரின்; பதிப்புரையும் படங்களுடன் வெளி வந்திருக்கும் இந்த வியத்தகு படைப்பானது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் சிறந்த ஆய்வு ஆவனமாகும்.
கல்விக்காக போராடும் ஒரு மக்கள் கூட்டமாக மலேசிய தமிழ் மக்கள் வாழ்வதுவும் கல்வியை அடிப்படையாக கொண்ட போராட்டமாக காணப்பட்டாலும் அவர்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை காக்கவும்தங்களின் இருப்பிட்காகவும் போராடிவரும் மலேசிய தமிழ் மக்களின் நாடித்துடிப்பினையும் அரசாங்கத்தின் மாற்றான்தாய் மனோப்பான்மையையும், மலேசியாவின் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் அமைச்சு பதவிக்காய் மக்களை காட்டி கொடுத்து வரும் மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் சாமிவேலு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் தொடர்பான விமர்சனங்களும் காட்டிக்கொடுப்புகளையும் மிகத்துணிச்சலாக எடுத்தியம்பி இருப்பது மு.வரதராசுவின் வர்க்ககுணாம்சத்தினை காட்டுகின்றது.
மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒன்று திரட்டி சிலாங்கார் மானிலத்தின் 97 ம் ஆண்டு நடத்திய நிலஒதுக்கீட்டு போராட்டமானது பெறும் வெற்றியினை பெற்றுத்தந்திருக்கின்றது இந்த போராட்டங்களின் போது தமிழ் மக்களுக்களுக்காய் போராடி வாழ்வதாய் கூறி வாக்குகளைப்பெற்று சுக போகிகளாக வாழும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியினர் எவரும் பங்கு கொள்ளவில்லை என்றும் இதற்கு காரணம் அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பங்கெடுத்தால் அரசு வழங்கும் சலுகைகளை இழக்க வேண்டிவரும் என்ற பயத்தினாலும் பேரம் பேசி சோரம்போகும் அடிமை சிந்தனை கொண்டவர்களுக்கு போராட்டஙகளின் பாழ் நம்பிக்கை இல்லை என்பதனையும் எமக்கு அடையாளப்படுத்தி நிற்கின்றது இந்த போராட்டத்தினை தோல்வியடையச்செய்வதற்காக மலேசிய இந்திய காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஒரு சிலர் காவல் துரையினரை தூண்டிவிட்டு போராட்டத்தினை தசை திருப்ப பல நரித்தனங்களை செய்தபோதும் அவை பெற்றோர்களினதும் மாணவர்களினதும் சானக்கியத்தினாலும் ஐக்கியத்தினாலும் முறியடிக்கப்பட்டது.
என்பது போராட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட தொழிலாளர் விவசாய பாட்டாளி மக்களுக்கும் எடுத்துகாட்டாகும்.
மலேசியாவில் 6ஆம் வகுப்பு வரை மாத்திரம் தமிழ் கல்வி உள்ளது என்று கூறும் ஆசிரியர் இவ்வாறான ஒரு நிலையிலும் அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படாமை மலாய அரசாங்கத்தின் சமனற்ற வள பகிர்வினை பரைசாற்றுவதாக காணப்படுகின்றது என்று கூறுகின்றார்.
கல்வியுடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய ஆசிரியர்களும் அதிபர்களும் விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக வேந்தர்கள் மாணவர்கள் போன்றோர் தங்களின் பதவி உயர்வுகளுக்காகவும் பட்டங்களுக்காகவும் மாத்திரமே இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த கால கட்டத்திலே இவர்கள் கல்வி செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டு கல்வியினைநோக்குபவர்கள் ஆனால் திரு வரதராசு களப்பணியில் ஈடுபடடு குறிப்பிட்ட வுpடயத்திற்காக போராடி இவற்றினூடாக பெற்ற படிப்பினைகளுடன் தனது படைப்பினை வழங்கியுள்ளமை பாண்டித்தியத்தினை பரப்புவதற்காய் ,பிழைப்பு வாதத்திற்காய் எழுதும் படைப்பாளிகளின் தொய்வான படைப்புகளில் இருந்து வேறுபட்டு மக்களுக்காய் எழுதப்படும் மக்கள் இலக்கியங்களின் வரிசையில் இடம் பிடிப்பதனை காண்கின்றோம்.
ஒடுக்கபட்ட மக்களின் கல்வி தொடர்பான உலக ஆய்வாளன் பவ்லோ பிரேரி சமூக வர்க்க அல்லது பொருளாதார அடக்குமுறையை எதிர்க்கின்றேன், சமகால முதலாளித்துவ முறையை எதிர்க்கின்றேன், ஏனெனில் கல்வியினை ஒடுக்கப்பட்டோர்களுக்கு கிடைக்காமல் செய்யும் முக்கிய காரணி இதுவாகும் என்று கூறுகின்றார். இந்த சிந்தனையில் இருந்து சற்றும் மாறாத மு.வரதராசு மக்கள் வாழ்வியழுடன் இணைந்து இப்படைப்பினூடாகவும் போராட்டத்திற்கு சக்தி சேர்த்து இருப்பது இவர் தனது இலக்கினை வெற்றிகரமாக அடைந்துள்ளதனை காட்டிநிற்கின்ரது இவரின் மற்றைய படைப்புகளும் மக்களுக்காக படைக்கப்பட்டவையே ஒழிய பணத்துக்காக படைக்கப்பட்டவையல்ல.
304 பக்கங்களை கொண்ட இந்த நூலானது மலேசிய மக்களுக்கு மாத்திரம் அல்ல இலங்கை நாட்டில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கும் விசேடமாக மலையக தமிழ் மக்களுக்கும் பல செய்திகளை கூறி நிற்கின்றது.இது சமூகமாற்று சிந்தனையுள்ள அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஆய்வு நூலாகும்.