பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் நாளில் முடிவுகள் வெளியாகும் போது கொண்டாட்டாட்டங்கள் அரங்கேறும். பட்டாசுகள், வான வேடிக்கைகள் என அந்த நாள் அறிவிக்கப்படாத தீபாவளி. 1952-ல் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்த காலம் தொட்டு இந்த சம்பிரதாயத்தில் எந்த குறையும் இதுவரை இருந்ததில்லை.மாறாக 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டபோது மாநிலமே பொது முடக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. ஊரடங்கியிருந்தது. பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த திமுக, தேர்தல் வெற்றியை கொண்டாடக்கூட முடியாத அளவுக்கு கொரோனா இங்கே கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. கடந்த காலங்களில் முதல்வராகப் பதவியேற்ற கையோடு தலைமைச் செயலகத்திற்கு வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்கொள்ளச் சவாலாக எந்த பெரிய பேரிடரும் அவர்கள் முன்னே நின்றது கிடையாது. ஆனால், முதல்வர் அலுவலகத்தின் கதவை முதன்முறையாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஸ்டாலினை வரவேற்றது கொரோனா வைரஸ்தான்!
ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே ஒரு வீடியோ ஒன்று வைரல் ஆனது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முன்பு சாலையில் சில மீட்டர்கள் தூரத்துக்கு ஆம்புலன்ஸ்கள் காத்துக் கிடக்கும் காட்சிகள் வீடியோவில் வெளியாகி தமிழகத்தைப் பதற வைத்தன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெமிடெசிவர் மருந்துகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. இன்றைக்கு ஒரு ஆம்புலன்ஸ்கள்கூட அந்த மருத்துவமனை வாசலில் நிற்கவில்லை. ரெமிடெசிவர் மருந்துகளுக்குத் தட்டுப்பாடும் இல்லை. பதவியேற்ற 20 நாட்களிலேயே அதைச் சாத்தியமாக்கினார் ஸ்டாலின்.கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு ஒன்றுதான் வழி. ஊரடங்கை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்துவதற்கு முன்பே அதனால் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் வாழ்வாதாரங்களை காக்க கொரோனா நிதியாக 4 ஆயிரம் ரூபாயை அளிக்க முதல் கையெழுத்திட்டார்.
* செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை.* ஊடகங்கவியலாளர்கள் முன் களப்பணியாளராக அறிவிப்பு.* மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக பெற்றது.* நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட வாரியாக அமைச்சர்கள்.* வார் ரூம். * பொது நிவாரண நிதிக்கு நிதி திரட்டல்.* அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு.* கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு.* மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாதம் ஊக்கத் தொகை.* பிற மாநிலத் தொழிற்சாலைகளிலிருந்து ரயில் மூலம் ஆக்ஸிஜன்.* ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு.* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகச் சட்டமன்ற அனைத்து கட்சிக் குழு.* உலக அளவில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய டெண்டர்.* ரெம்டெசிவர் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டம்.* தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து விற்பனை.* சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் எனப் பல மாவட்டங்களில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கொரானா சிறப்புச் சிகிச்சை மையங்கள்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை அரசே ஏற்று நடத்த முயற்சி. * கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி. இப்படி தினமும் கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஸ்டாலின் செயல்பாட்டை ராமதாஸும் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுகிறார்கள். கொரோனா தொடர்பாக வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக ஒரே வாரத்தில் மூன்று முறை ஸ்டாலினுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். திமுக தொண்டர்களும் முன்னணியினரும் ஸ்டாலினை ’தளபதி’ என்றுதான் அழைப்பார்கள். அந்த தளபதி என்ற சொல்லைக்குட ஜெயலலிதா தொடங்கி பலரும் எள்ளல் செய்தார்கள். leading from the front என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. முன்னணியில் நின்று படையை நடத்துவது என்பதுதான் அதன் பொருள். கொரோனா என்கிற போரில் முன் களத்தில் உண்மையில் தளபதியாக நின்று களமாடிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள். 68 வயது நிரம்பிய நமது குடும்பத்தின் மூத்தவர் ஒருவரை கொரோனா வார்டுக்குள் நாம் அனுப்பி வைப்போமா? நிச்சயம் அந்த ரிஸ்க்கை எடுக்க மாட்டோம். ஆனால், ஒரு முதல்வராக உயிரைப் பணயம் வைத்து கவச உடை அணிந்து கொரானா வார்டுக்குள் ஸ்டாலின் போனார். டெல்லி சவுத் பிளாக்கில் உட்கார்ந்து கொண்டு கையை தட்டச் சொல்லவில்லை. மணியை ஆட்டக் கட்டளை போடவில்லை. கொரோனாவை அறிவியல்பூர்வமாக எதிர்கொண்டார் ஸ்டாலின். அதற்காக கோட்டையில் அமர்ந்து கொண்டு செய்யவில்லை.
மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளையும் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். நள்ளிரவிலும் கொரோனா வார் ரூமிற்கு சென்று பார்வையிட்டு “நான் ஸ்டாலின் பேசுறேன்” என வார் ரூமுக்கு வந்த அழைப்புகளை அட்டண்ட் செய்தார்.கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. ஆனாலும் அங்கே சென்று கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்கிறார் ஸ்டாலின். கொரோனா இந்தியா முழுவதும்தான் பரவியிருக்கிறது. கொரோனா வந்து ஓராண்டுக்கும் மேலான பிறகும் ஒரே ஒரு முறை கூட பிரதமரை கொரோனா கவச உடையில் நோயாளிகளை நலம் விசாரித்த காட்சியைப் பார்த்ததுண்டா? பிரதமருக்கே பாடம் எடுத்திருக்கிறார் ஸ்டாலின்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று கருணாநிதி சமாதியில் ஸ்டாலின் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது .’’எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் ஓட்டுப் போடாதவர்கள் எங்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைத்து நிச்சயம் வருத்தப் படும் அளவுக்கு எங்களது பணி இருக்கும்’