Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மு.க.அழகிரி மருமகனிடம் போலீஸார் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் மோசடியில் ஈடுபட்ட அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் கருணாநிதியின் பேரனுமானதுரைதயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்ட 40 பேர் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமிக்கு மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் ஏக்கர் சொத்து இருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இதர கிரானைட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆயிரம் ஏக்கர் சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிரானைட் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பி.ஆர்.பழனிசாமி மீது இதுவரை 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசின் விதிமுறையை மீறி கிரானைட் வெட்டி எடுத்தது, கிரானைட் கற்களை அரசு கண்மாய், கால்வாய்களில் அடுக்கி வைத்து நீர்நிலைகளை அழித்தது, நிலங்களை மிரட்டி வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் பி.ஆர்.பழனிச்சாமி மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளின் கணவர் (மருமகன்) வெங்கடேஷிடம் போலீஸார் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினர்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. மற்றும் ஒலிம்பஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ் வழக்கில் ஒலிம்பஸ் நிறுவனப் பங்குதாரராக இருந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் துரைதயாநிதியைக் கைது செய்ய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துரைதயாநிதியின் இருப்பிடம், அவரது கிரானைட் தொழிலில் ஈட்டிய வருவாய் குறித்த விவரங்களை அறிய அழகிரியின் உறவினர்கள், துரைதயாநிதியின் நண்பர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

துரைதயாநிதிக்கு நெருக்கமான உறவினர்களுக்கு மதுரை ஊரகப் போலீஸார் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். துரைதயாநிதியின் நெருங்கிய நண்பர்களை திடீரென அழைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், துரைதயாநிதியின் சகோதரி கயல்விழியின் கணவர் நாகர்கோவிலைச் சேர்ந்த வெங்கடேஷை விசாரணைக்கு வருமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். அதனை ஏற்று செவ்வாய்க்கிழமை காலையில் அவர் மதுரை ஊரக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தார்.
அவருடன் மதுரை திமுக வழக்குரைஞர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் வந்தனர். இதையடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
துரைதயாநிதி கிரானைட் தொழிலில் ஈட்டிய வருவாய் குறித்தும், அந்த வருவாய் வேறு தொழிலில் முதலீடு செய்யப்பட்டதாகவும் கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியின்போது துரைதயாநிதி சார்பில் திரைப்படம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த தொழில் முதலீட்டுக்கான பணம் எங்கிருந்து வந்தது? அப் பணம் கிரானைட் தொழிலில் ஈட்டியதா என போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே வேளை ஜெயலலிதா ஜெயராம் மக்கள் பணத்தை சூறையடிய விவகாரம் தொடர்பான வழக்கு பெங்களூரில் நடைபெறுகிறது. இவ்வளக்கிற்கு முதலமைச்சர் ஜெயலாலிதா சமூகமளிக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

Exit mobile version