Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முள்ளிவாய்க்கால் தடையங்களை அழிக்க திரவங்கள் வாங்கப்பட்டன ?

இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டு வைக்காது அழிப்பதற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
போர் முடிவுற்று மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மேற்படி பகுதிகளில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இந்த நிலையிலேயே அங்கு எஞ்சியிருக்கக் கூடிய மனித புதைகுழிகளிலும் காணப்படும் எலும்பு எச்சங்களையும் உக்கச்செய்து மண்ணோடு மண்ணாக்க திட்டமிடப்படுவதாக தெரிகிறது.
முன்னதாக ஜேர்மனிய இரசாயன நிறுவனத்திடமிருந்து திரவங்களை வாங்கியதாகவும் தகவல்களி வெளியாகியிருந்தன.

Exit mobile version