Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முன்னை நாள் போராளிகளைத் தண்டிக்கவில்லை என கோத்தவைக் கடிந்துகொண்ட அமரிக்க அடியாள்

mahindhaஎல்லா வளங்களையும் கொண்ட் எந்தக் குறையுமற்ற மண்ணில் சுரண்டிக் கொழுக்க அன்னியர்கள் வந்திறங்கிய முதலாம் நாளிலிருந்து மனிதப் பிணங்களை மட்டுமே பார்க்கிறோம். தேசிய இனப் பிரச்சனையை இலங்கையில் திட்டமிட்டுத் தோற்றுவித்த அன்னியர்கள் பெருந்தேசிய வாதத்தைத் தோற்றுவித்தனர். அதற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தை குறும் தேசிய வாதமாக மாற்றிச் சிதைத்தனர்.

பெருந்தேசிய வாத அரசு வன்னியில் இனப்படுகொலை நடத்த அனைத்து வலுவையும் வழங்கினர். இறுதியில் அது இனப்படுகொலை அல்ல போர் விதிமுறைகள் மீறப்பட்டதால் போர்க்குற்றம் என்றனர். பேரினவாதிகள் போராளிகளைச் சிறையில் போட்டு சித்திரவதை செய்தனர். விடுதலைக்காகப் போராட மக்கள் மீதிருந்த பற்றினால் இராணுவப் பயிற்சியெடுத்துக் கொண்டவர்களை பாலியல் வதைகளுக்கு உட்படுத்தியது. சிறைகளை மனிதக் கசாப்புக்கடைகளக்கியது இலங்கை அரச பாசிசம்.
ஏகதிபத்திய நாடுகளின் ஆசியோடு மகிந்த ராஜபக்ச போன்ற கிரிமினல்கள் தமது ஆட்சியை தங்குதடையின்றி நடத்தினர்.
சித்திரவதைகளால் சிதைக்கப்பட்ட போராளிகள் புனவாழ்வு வழங்கப்பட்டவர்கள் என்று மகிந்த பாசிசம் பொய் கூறியது. கைதுசெய்யப்பட்ட பலர் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் போராளிகளைத் தண்டிக்காமல் விட்டது தவறு என்று இலங்கையில் போர்க்குற்ற ஆய்வு நடத்ததும் அமரிக்க அடியாள் ஸ்ரிபன் ராப் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், விடுதலைப் புலிகளின் போரில் ஈடுபட்ட முன்னாள் உறுப்பினர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு புனர்வாழ்வளித்தமை ஏற்புடையதல்ல என்று ராப், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கடந்த 6 ம் திகதி நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அரசை அமரிக்கா அறுபது ஆண்டுகளாகத் தண்டிக்கப் போவதாக நாடகம் நடத்தி வருகிறது.

Exit mobile version