Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்ட்!

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் ஈடுபட்டுள்ளது.

முந்தைய அதிமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். சசிகலா ஆதரவாளராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் மத்திய வருமானவரித்துறை ரெய்ட் அடித்தது பெரும் சர்ச்சைகளை  உருவாக்கியது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அவர் செலவு செய்த  தொகைகள் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக  சொத்துக்களை குவித்தது தொடர்பாக சர்ச்சைகள் இருந்து  வந்தது. ஆனால், அந்த ரெய்டுகள் அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்பட்டவை.

பாஜக அப்போதைய சசிகலா ஆதரவாளர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காகவே ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் இப்போது திமுக முன்னாள் அமைச்சர் மீது ரெய்ட் நடத்தி வருகிறது.

இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் மற்றும் அவரது மாமனார், உறவினர்கள் உட்பட அவரது நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என 43 இடங்களில் ரெய்ட் நடத்தி வருகிறது.

இதில் கிலோ கணக்கிலான நகைகளும் ஏராளமான பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version