Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை-2.16 கோடி பறிமுதல்!

கடந்த அதிமுக ஆட்சியில் செல்வத்தோடும் செல்வாக்கோடும் வலம் வந்தவர்.மின் துறை, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் கலால் வரித் துறை அமைச்சராக இருந்தவர் பி. தங்கமணி. இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சட்டவிரோதமாக தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தங்கமணி சொத்துகளைக் குவிக்க, அவரது மனைவி சாந்தி, அவரது மகன் தரணிதரன் ஆகியோர் உதவியதாக இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன் எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தியதன் மூலம் இதனைச் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கமணி அமைச்சராக பதவியேற்ற காலத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1,01,86,017ஆக இருந்த நிலையில், அவர் பதவி முடிவுக்கு வந்தபோது சொத்து மதிப்பு ரூ. 8,47,66,318ஆக உயர்ந்துள்ளது. இதில் தங்கமணி, சாந்தி, தரணிதரன் ஆகிய மூவரும் சட்டபூர்வமாக சம்பாதித்த தொகை ரூ. 5,24,86,617ஆக உள்ளது.

இன்று அவருக்குச் சொந்தமான 69 இடங்களில் 9 மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களிலுமாக இன்று லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரெய்ட் நடத்தியது.

இந்த சோதனையின் போது அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள் போராடியவர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. சோதனை முடிவில்  2,16,37,000 இரண்டு கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் சோதனையில் கைப்பற்றப்பட்டதோடு.  ஒரு கிலோ தங்கம் 40 கிலோ வெள்ளியும் கைப்பற்றபப்ட்டது.

அவரது வங்கி பெட்டகங்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

Exit mobile version