Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதல்வரைக் கொல்வோம் என்று பேசிய சாட்டை துரைமுருகன் கைது!

ஒருவருடத்திற்கு தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார் நாம் தமிழர் கட்சி துரைமுருகன்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடந்தது இக்கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன் ”கேரளமாநிலத்தில் ஒரு ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்தவன் முதல்வராக இருக்கிறான். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன் முதல்வராக இல்லை” என்று பேசினார்.

பின்னர், “கருணாநிதியையும் அண்ணாவையும் படித்தவர்கள் நன்றாக எழுதுவார்கள். நாங்கள் பிரபாகரனின்  என்னசெய்வோம் என்பது சோனியாகாந்தியும்,ராகுல்காந்திக்கும் தெரியும். ஸ்ரீபெரும்புதூரில் என்ன  செய்தோமோ அதைச் செய்வோம்” என்றார்.  இவர் இப்படி பேசும் போது மேடையில் சீமான் அதை ரசித்துக் கொண்டிருந்தார்.

இது காங்கிரஸ் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்க அவருக்கு எதிராக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட அதன் அடிப்படையில் அதிகாலை கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் நாங்குனேரி சிறையில் அடைக்கப்பட்டிக்கிறார்.

அவர் மீது பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Exit mobile version