Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதல்வரானார் ஸ்டாலின் ஆக்சிஜன் கோரி பிரதமருக்குக் கடிதம்!

தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவரோடு 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் குறைவான நபர்களே அனுமதிக்கப்பட்டனர்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என தன்னை அடையாளப்படுத்தி ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்ற போது அரங்கில் கரகோஷம் எழுந்தது. பலரும் அழுதனர். பதவியேற்பு முடிந்து பெரியார், அண்ணா, கலைஞர் சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கும் சென்று மரியாதை செய்தார். பின்னர் தலைமைச் செயலத்திற்கு வந்தவர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும் என்ற அறிவிப்பும், நகர்ப்புற அரசுப் பேருந்துகளில் நகர்ப்புற பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பும், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என்ற ஒரு உத்தரவும், கொரோனா நிவாரணமாக நான்காயிரம் ரூபாயும் அறிவித்தார்.
பின்னர் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில், “தமிழகத்திற்கு 440 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுவதகாவும், அடுத்த நான்கு நாட்களுக்குள் தமிழகத்திற்கு தேவையான 40 டன் ஆக்சிஜனை வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசு கேரள மாநிலத்தில் உற்பத்தி செய்யும் 40 டன் ஆக்சிஜனை தமிழகத்திற்கே வழங்க வேண்டும்” என்றும் கடிதத்தில் கோரியுள்ளார். மிக மோசமான ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் முதல்வராகியுள்ள ஸ்டாலின் தன் ஆட்சிப்பணியினை எதிர்கொள்வது பெரும் சவாலான ஒன்றுதான்.

Exit mobile version