Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதல்வராகும் ஸ்டாலின்!

234 தொகுதிகள் அடங்கிய தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறது. இது 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றியை விட கவனிக்கத்தக்க குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
தமிழகத்தின் தனிப்பெரும்பான்மை பெற 118 தொகுதிகள் அவசியம் என்னும் நிலையில் 130 தொகுதிகள் வரை திமுக தனித்து வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 130 தொகுதிகளில் முன்னிலை பெறுகிறது. 77 தொகுதிகளில் வெற்றியை இறுதி செய்திருக்கிறது.
25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், சிபிஐ. சிபிஐ எம் 2 தொகுதிகளிலும் என மொத்தம் 160 தொகுதிகளில் திமுக முன்னிலை பெறுகிறது.
முழு முடிவுகளும் நாளை காலைதான் தெரியவரும் என்ற நிலையில், அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டு 64 தொகுதிகளிலும், 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.

Exit mobile version