Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதலாளித்துவம் ஓர் பாவமா? -மைக்கல் மூர் ஓர் சிறு அறிமுகம்!(Capitalism: A Love Story ):ரதன்

Capitalism: A Love Story (2009)

Director:Michael Moore

மைக்கல் மூர் ஓர் சிறு அறிமுகம்:

மைக்கல் மூர் அமெரிக்க மிச்சிக்கன் மாநில தொழில் நகரமான Flintஇல் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது முதலாவது படமான Roger and Me  வெளிக்கொணர்ந்தபொழுது இவர் கிழமைக்கு 99 அமெரிக்க டொலர்களை சம்பளமாகப் பெற்றுக் கொண்டிருந்தார். உலகின் சிறந்த விவரணத் திரைப்படப்பாளிகளில் இவருக்கும் ஓர் இடமுண்டு.

 விவரணத் திரைப்படமும் அதன் கூறுகளும்:

 இது ஒரு புனைகதையற்ற திரைவடிவம். இதன் வரையறைகள்

1. எல்லைகளற்றது

2. மக்கள், இடம், சம்பவங்கள் ஆகியன கற்பனையற்ற உண்மையானவை.

3. சம்பவங்கள் நடைபெறும்பொழுது அங்கேயே படம்பிடிக்கப்படுகின்றன. இச் இச்சம்பவங்கள் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றன. பொதுவாக நெறியாளர்கள் தங்கள் கற்பனைகளையோ மன ஓட்டத்தையோ இதில் வகிக்க முடியாது.

4. இங்கும் உரைஞர் இருப்பதால் இவை பிரச்சாரப் படங்களாகவும் பல சமயங்களில் உள்ளன.

 இவரது விவரணத்திரைப்படங்கள் reflexive விவரணத் திரைப்படங்களாகும். (செயல் மீதே தாக்குதல்) இவ்வகைப் படைப்புகளை Bertolt Brecht, Jean-Luc Godard போன்றவர்கள் படைத்துள்ளனர். இது இடதுசாரி திரைப்படப் படைப்பாளிகளிடம் மிகவும் பிரசித்தமானது. இவை சமூகத்தின் சமூக அரசியல் உண்மைகளை சனநாயக முதலாளித்துவ அமைப்பில் வெளிக் கொணர பெரிதும் உதவி புரிகின்றன. மைக்கல் மூர் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கோட்பாடுகளையும் சமூக அரசியல் பிரச்சாரங்களையும் தமது பார்வையாளர்கள் நுகர்வதைத் தடுக்கிறார்.

 இவை மிகவும் அவதானத்துடன் கையாளப்படுகின்றன. ஓர் புலனாய்வுப் பத்திரிகையாளர்போல் நீண்ட ஆய்வுகளை மேற்கொள்கிறார். இது அமெரிக்காவின் கற்பனைவாத மேலெழுந்தவாரியான தொடர்பு உடகங்களால் உள்வாங்கப்பட்ட விடயங்களின் மறுபக்கத்தை நுகர்வோர்மீது முன்வைக்க உதவுகின்றது.

வழமையான விவரணப் படங்களில் உரைஞர்கள் கூறுவதை இவர் தவிர்க்கின்றார். மாறாக தமது படங்களில் உண்மைச் சம்பவங்களை நேரடியாகக் காட்டுகின்றார். உதாரணத்துக்கு  பரனைற் 9 /11 என்ற படத்தில் அமெரிக்க செனட்டரை நேரடியாகவே,

“உமது மகன் அமெரிக்க இராணுவத்தில் உள்ளாரா?” எனக் கேட்கின்றார். அதேபோல் இராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்களுடன் செனட் வாசலில் நிற்கின்றார். KMart முன்னால் நின்று Columbine  துப்பாக்கி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றார்.

இவரது படங்களில் ஒரு நடிகராக இவரும் இருப்பது என்பது பார்வையாளர்களுக்கும் இவருக்கும் இடையில் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கின்றது. இதனால்தான் இவரது படங்கள் வர்த்தகரீதியிலான  படங்களைப்போல் சாதனை படைத்துள்ளன.  பரனைற் 9 /11  , 113 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்தது. திரைப்பட சரித்திரத்தில் Box Office இல் முதல் வாரரம் முதலாவது இடத்தைப் பெற்ற முதல் விவரணத் திரைப்படம் இதுவே.

இவர் மத்திய, தொழிலாளர் வர்க்கத்தினருள் ஒருவராக தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும், பெரும் அரசியல் வர்த்தக பிரமுகர்களை நேரடியாக அவர்கள் மூலமாகவே அவர்களை விமர்சிக்க வைக்கின்றது. இவர் ஒருவரே கம்பெனி அமைப்புகளையும் அரசியலையும் விமர்சிப்பவர். Roger & Me நேரடியாகவே கம்பெனி அமைப்புகளை விமர்சிக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு அரசு என்ன செய்தது என்ற கேள்வி பலமாகவே எழுப்பப்படுகின்றது. இவ்விரு சமூகங்களுக்கான தொடர்புகளை இவர் பின்வருமாறு விளக்குகின்றார்.

 DIAGRAM FORMAT – have to see

 இந்த வடிவத்தை தனது  பரனைற் 9 /11இல் முன் வைக்கின்றார்.

இவர் நேரடியாக மார்க்சியக் கருத்துக்களை முன்வைக்காமல் அரசியல் பிரச்சினைகளை அதன் உண்மைகளுடன் மக்கள் முன் சமர்ப்பிக்கின்றார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சமூகத்தை உண்மையை நோக்கிச் செல்லத் தூண்டுகின்றார்.

 முதலாளித்துவத்தின் நேர்மையின்மையையும் தொடர்பு சாதனங்களின் போலித்தன்மையையும் இவர் உடைக்கின்றார்.

போர் என்பது உண்மையான போரா என்ற கேள்வி ஒரு புறம். மறுபுறம் வெற்றிக்கான போரா என்பதுதான் முக்கியம். ஆளும் கட்சியினரால் தமது சொந்த நலன்களுக்காக நடத்தப்படுபவையே போர். எனவே போர் தொடரவேண்டும். பட்டினிக்கான தேடலில் மக்கள் இருக்க வேண்டும். எனவே தொடருதலே போர்.

கடந்த பல தசாப்தங்களில் முடிவுக்கு வந்த போர்கள் வெகு குறைவே. பாலஸ்தீனம், காஷ்மீர், வளைகுடா யுத்தங்கள், இடதுசாரிகளுக்கு எதிரான யுத்தம்.  பரனைற் 9 /11இல் மைக்கல் மூர் முன்வைப்பது இதுவே. மக்களிடம் ஒரு பயத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஒரு போரைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதுவே அரசின் கவனமாக உள்ளது.

 இவர் தனது படங்களில் மூன்று படிகளில் விமர்சனங்களை வைக்கின்றார்.

1. உண்மைகளைக் கூறுதல்

2. அதற்கான காரணங்களைக் கூறுதல்

3. எங்கிருந்து வருகின்றது என்ற தொடர்புகளை வெளிப்படுத்துகின்றார்.

 இவரது நான்கு படங்களிலும் (Farenheit 9/11, Canadian Bacon, Roger & Me, Bowling of Colombine) இவ்வாறான வடிவத்தைக் கையாண்டுள்ளார்.  பரனைற் 9 /11 படத்திற்கு பதிலளித்த Condoleezza Rice

9/11 க்கும், ஈராக்கும் தொடர்பு உண்டு. இதில் சதாம் நேரடியாக சம்பந்தப்படவிலலை. இது கருத்தியல் ரீதியாக அமெரிக்காவுக்கு எதிராக எழுந்துள்ள வெறுப்பே இந்த 911.

 

 இது மைக்கல் மூரின் திரைப்பட வடிவத்துக்கு கிடைத்த வெற்றி. இப் படத்தை ரெக்ஸாஸ் மாநிலத்தின் விசேட காட்சி ஒன்றில் ஜோர்ஜ் புஷ் கலந்துகொள்ள ஏற்பாடாகி இருந்தது. அமெரிக்க அதிபர் மறுத்து விட்டார்.

இப்படத்தை தயாரித்த Miramax (Disneyஇன் துணை நிறுவனம்) இப்படத்தைத் திரையிட மறுத்துவிட்டது. பின்னர் Miramax அதிகாரிகள் இருவர் தமது சொந்த நிறுவனத்தின் பெயரில் விநியோகித்தனர்.

Disney நிறுவனம் அமைந்துள்ள ஃப்ளோரிடா மாநில கவர்னர் புஷ் இன் சகோதரர். எனவே வரிச் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என்பதே  மைக்கல் மூரின்    கவலை.

இவரது நூலையும் அமெரிக்க ஊடகங்கள் மதிப்பீடு செய்ய மறுத்துவிட்டன. ஆனாலும் பல இலட்சம் நூல்கள் விற்பனையாகி விட்டன. இதனைப் பதிப்பித்த நிறுவனம், மீள்பதிப்பின்போது பல சட்டங்களைப் பிறப்பித்தது. நூலின் 50வீதமானது திருத்தி எழுதப்படவேண்டும், stupid white men  என்ற தலைப்பு மாற்றப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட பிரதிகளுக்காக 100000 அமெரிக்க டொலர்கள் வழங்கவேண்டும் போன்றன. இவரது பலத்திற்கான உதாரணங்கள்

ஒரு படைப்பாளியாக பல நெருக்கடிகளைச் சந்தித்த மூர் ஒரு போராளியும் கூட. தமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாகவே பயன்படுத்தியுள்ளார். சிறந்த விவரணப் படத்திற்கான ஒஸ்கார் விருதைப் பெற்ற பொழுது “நாங்கள் பொய் சார்ந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொய்யான தேர்தல் முடிவுகள், பொய்யாகத் தேர்வுசெய்யப்பட்ட அதிபர், பொய்யான காரணங்களுக்காக மனிதர்களைப் போருக்கு அனுப்புகின்றோம். Shame on you Mr. Bush Shame on you”  எனக் கூறிவிட்டே மேடையை விட்டிறங்கினார்.

இதன் பின் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போது “நான் ஓர் அமெரிக்கன்” எனக் கூறியபொழுது “அவ்வளவு தானா?” என ஓர் பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு மூர் “அதுவே அதிகம் ” எனப் பதிலளித்துவிட்டு “நான் எனது நாட்டை நேசிக்கிறேன். ஜனநாயகத்தை நேசிக்கிறேன்” எனக் கூறினார். இவரது இந்தப் போர்க் குணாம்சத்தை வேறு படைப்பாளிகளிடம் காண முடியாது. அவர் கூறும் ஜனநாயகம் என்ற வார்த்தை இவர் பிரயோகிக்கும் ஓர் அம்பு.

இவரது படங்களில் உலகமயமாதல், நிறவாதம் போன்றவை விமர்சிக்கப்படுகின்றன. துப்பாக்கிக் கலாச்சாரத்தில் வெள்ளையர்களின் பங்கை தகுந்த ஆதாரங்களுடன் காட்டியுள்ளார். அதேபோல்  பரனைற் 9 /11இல் சம்பவத்தின் அமெரிக்க அரசின் பங்கையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஓர் தொழிலாளியின் மகனாகப் பிறந்து தொழிலாளர்கள் மத்தியதர வர்க்க மக்களின் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் அரசியல் பிரச்சாரமற்ற தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

 Roger & Me

 இப்படத்தைப்பற்றிப் பார்ப்பதற்கு முன்பு பின்வரும் விடயங்களைப் பார்ப்பது நல்லது.

Roger Smith

 1981-1990வரை அமெரிக்க மோட்டார் கார் நிறுவனமான General Motors  என்ற மிகப் பெரிய நிறுவனத்தின் அதிபராக1981-1990வரை கடமையாற்றினார். இவர் ஆரம்ப காலங்களில் அமெரிக்க கடற் படையில் பணி புரிந்துள்ளார். இவரது காலத்தில் இவர் கொரிய, யப்பானிய நிறுவனங்களுடன் இணைந்து கார் உற்பத்தியில் ஈடுபட்டார். இவர் தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்து அதன் பேறாக அதிக லாபத்தைப் பெறும் நோக்குடன் செயற்பட்டார். கனடா, மெக்சிக்கோ போன்ற அயல் நாடுகளில் தொழிற்சாலைகளை லாபநோக்குடன் ஸ்தாபித்தார். இத் தொழிற்சாலைகள் காலப் போக்கில் இப்போது சீனாவிற்கு மாற்றலாகி விட்டன. மெக்சிக்கோவில் தொழிலாளர் சட்டங்கள் உறுதியற்றவையாக உள்ளன. சீனாவின் தொழிலாளர்களுக்கான ஊதியம் மிகமிகக் குறைவு.

 Flint

அமெரிக்காவில் மிச்சிக்கன் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த நகரம். General Motors நிறுவனம் 1908ம் ஆண்டு இந்த நகரத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. மைக்கல் மூர் இந்த நகரத்திலேயே பிறந்தவர். இவரது பெற்றோர்கள் General Motors தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார்கள். இவரது தாத்தாவும் GM இல்தான் வேலை பார்த்தவர்.

 Roger & Me

 Roger Smith உம் மைக்கல் மூரும்

 

1988இல் Flintஇல் உள்ள GM தொழிற்சாலையை Roger Smith மூடினார். இதனால் சுமார் 33000 பேர் வேலை இழந்தனர். இதே ஆண்டு புதிய தொழிற்சாலைகள் கனடாவில் ரொறன்ரோவிற்கு அருகில் உள்ள ஒஷாவா நகரிலும் மெக்சிக்கோவிலும் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றிற்கு இந்நாடுகளின் பணவீக்கம், ஸ்திரமற்ற தொழிலாளர் சட்டங்கள், குறைந்த வேதனம் போன்றவற்றுடன் இவை அண்டை நாடுகள்.

GM  வேலைநீக்கத்துக்கான காரணமாக யப்பானிய, கொரிய, ஐரோப்பிய கார்களின் இறக்குமதி போன்ற பல காரணங்களை முன் வைத்தது. ஆனால் இதே ஆண்டு GM  நிகர லாபமாக 4.87 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றது.

Roger & Me  இந்தத் துயரமான வேலை இழப்புச் சம்பவத்தை எள்ளலுடன் விவரணப் படமாக்கியுள்ளது. GM அதிபர் Roger Smith  மைக்கல் மூரைச் சந்திக்க மறுத்துவிட்டார்.

இதே ஆண்டு பின்னர் தொடர்ச்சியாக ஏற்பட்ட வேலை நிறுத்தங்கள் GM இன் உற்பத்தியை சில காலம் பாதித்தது. சுமார் 29 தொழிற்சாலைகளில் உற்பத்தி அறவே நின்று போய்விட்டது. ஆனால் பின்னர் United Auto Workers  தொழிற் சங்கத்துடன் GM பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இன்று இவ்வாறான வேலைநிறுத்தங்கள் உற்பத்தியைப் பாதிக்காத வண்ணம் தொழிற்சாலைகளில் பலவற்றை ஆசிய நாடுகளில் அமைத்துனள்ளது.

Corporate World ப்பற்றி மிக ஆழமாக விமர்சித்த படம் இப்படமே.

 

Canadian Bacon (1995)

 இவரது அரசியல் நகைச்சுவைப் படம். அமெரிக்க அதிபர் கனடிய அமெரிக்க எல்லை நகரான நயகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் அமைந்துள்ள ஆயுதத் தொழிற்சாலையைப் பார்வையிட வருகின்றார். இந்தத் தொழிற்சாலை பல வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இவரது வருகையின்போது இவரது ஆலோசகர்கள் பலர் போர் ஒன்றின் தேவையை வலியுறுத்துகின்றனர். எந்த நாட்டுடன்? இதுவே கேள்வி. சோவியத் ய+னியன் ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டது. நாங்கள் உங்களிடம் தோல்வியடைந்து விட்டோம். இப்போது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எமது தேவை. எந்த நாடு என்ற கேள்விக்கு ஏற்கனவே கனடாவிற்கு அணுஆயுத உற்பத்தி இரகசியங்களை விற்பனை செய்த தொழில்நுட்பவியலாளர் உட்பட பலர் கனடாவைப் பரிந்துரைக்கின்றனர்.

சிலகாலம் போரின்றி காலம் கழித்த அதிபர் கனடாவுடன் போர் தொடுக்கின்றார். கனடாவில் NDP  என்ற தேசிய ஜனநாயகக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி உண்டு. என்பது போன்ற உப்புச் சப்பற்ற காரணங்களுடன் கனடாவைப் பயங்கரவாதமான நாடு என்று காட்டுவதற்காக அனைத்துக் காரணங்களையும் தொடர்பு சாதனங்கள் முன்வைக்கின்றன.

இப்படத்தில் மறைந்த Alan Alda அமெரிக்க அதிபராக சிறப்பாக நடித்திருந்தார். இவருடன் John Cardy, Rhea Perleman போன்றோரும் சிறப்புற நடித்திருந்தனர்.

இப்படம் அமெரிக்க அரசியலின் அவலங்களையும் புலனாய்வு நிறுவனங்களையும் வெகுசன தொடர்புச் சாதனங்களின் செய்தி திரிபுகளையும் நகைச்சுவையுடன் கேலி செய்கின்றது. மறுபுறம் கனடிய புலனாய்வு நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை.

 

Bowling of Columbine

 Columbine உயர்பாடசாலையில் Bowling(மாணவர்கள் விரும்பினால் இந்த விளையாட்டை ஓர் பாடமா படிக்கலாம் – elective course) வகுப்பின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் ஆரம்பமாகி அமெரிக்க வன்முறைக் கலாச்சாரத்தை அதன் கூறுகளை ஆராய்கின்றது இந்த விவரணத் திரைப்படம். இதற்கு கனடியர்கள் பண உதவி செய்து தயாரித்துள்ளனர். இப்படம் 55வது கான் திரைப்பட விழாவில் சிறந்த விவரணத் திரைப்பட விருது பெற்றது. ரொறன்ரோ திரைப்பட விழாவில் மிகச் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது.

  பரனைற் 9 /11இல் மூர் முன் வைக்கும் ஆதாரங்கள்

 1. ஃப்ளோரிடா மாநிலத்தில் புஷ் இன் வெற்றியை FOX தொலைக்காட்சி நிறுவனம்தான் கூறியது. அதற்கு முன்பாக வேறு பல நிறுவனங்கள் கோர் வெற்றி பெற்றதாகவே அறிவித்தன.

 2. FOX இல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் அதிகாரியாக இருந்தவர் புஷ்ஷின் ஒன்றுவிட்ட சகோதரர்.

 3. 40வீதமான நாட்களை புஷ் விடுமுறைகளில் கழிக்கின்றார்.

 4. முதலாவது விமானம் உலக வர்த்தக மையத்தை தாக்கிவிட்டது என்ற செய்தி தெரிந்த பின்னர் புஷ் பள்ளி மாணவர்களுடன் நின்று படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

 5. மு.ப. 9.05க்கு இரண்டாவது விமானமும் தாக்கி விட்டது என்று தெரிந்த பின்னரும் புஷ் பள்ளி மாணவர்களுக்கு My Pet Goat  என்ற பாடத்தை வாசித்துக் கொண்டிருந்தார்.

 6. 06.08.2001இல் – அதாவது தாக்குதல் நடைபெறுவதற்கு சில நாட்களுக.க முன்பாகவே – இதனை புஷ் அறிந்திருந்தார்.

 7. 06.08.2001இல் புஷ் மீன் பிடிப்பதற்காகச் சென்றிருந்தார்.

 8. பின் லாடனுக்கு ஆயுதங்களை வழங்கியவர் இவரது தந்தையே.

 9. புஷ் ஃப்ளோரிடா மாநிலத்தின் கவர்னராக இருந்தபொழுது பின்லாடன் அங்கு விஜயம் செய்தார். அவருக்கு அந்த மாநிலத்தைச் சுற்றிக் காண்பித்தது புஷ்ஷின் ஃப்ளோரிடா அரசே.

 10. 11 செப்டெம்பர் 2001 நிகழ்வின் பின் அனைத்து விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் விஷேட விமானத்தின் மூலம் பின் லாடன் குடும்பம் சவுதிக்கு சென்றனர்.

 11. 13.09.2001இல் சுமார் 12 விமானங்களில் 142 சவுதிப் பிரஜைகள் சவுதி சென்றனர். இவர்களில் 24 பேர் பிள்லாடனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

 12. 2001ம் ஆண்டில் பின்லாடனின் மகனின் திருமணத்துக்கு புஷ்ஷின் குடும்பமு உறவினர்களும் சென்றனர்.

 13. 2000 ஆண்டிலும் 2004இலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. (படத்தில் மூலமும் பிரதியும் காட்டப்பட்டன) மூலத்தில் ஜோர்ஜ் டபிள்யு  புஷ் விமானப்படையில் இருந்து நீக்கப்பட்டது பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 14. James R. Bath – Texas Money Manager. இவரும் புஷ்ஷம் நெருங்கிய நண்பர்கள். அத்துடன் இவர் பின்லாடனின் வர்த்தக ஆலோசகர்.

 15. பாத்தும் புஷ்உம் பின்லாடன் குழுவினருக்கு விமானங்களை விற்றுள்ளனர்.

 16. ரெக்ஸாஸ் எண்ணெய் நிறுவனமான ARBUTO புஷ்இன் சொந்த நிறுவனம்.

 17. The Carlyle Group போன்ற எண்ணெய் நிறுவனங்களில் புஷ் அதிகாரப் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிறுவனத்திற்கும் பின்லாடனுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்தன.

  18. செப்டெம்பர் 11ம் திகதி காலை The Carlyle Group  நிறுவனத்தின் பங்குதாரர்களின் கூட்டத்தில் பின்லாடனின் சகோதரர் ஷாஃபிக் பின்லாடன் கலந்து கொண்டார். ஜேம்ஸ் பேக்கரும் இவரும் செப்டெம்பர் 11 சம்பவத்தை ஒன்றாக இருந்து பார்த்தனர்.

 19. The Carlyle Group க்கும் பின்  லாடனுக்கும் நெருக்;கமான உறவுகள்; உள்ளன. இந் நிறுவனம்  ஆயத விற்பனையையும் மேற் கொண்டுள்ளன.

 20. சவதி அரேபியா சுமார் 860 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. இது மொத்த முதலீட்டில் 7- வீதம் ஆகும்.

 21. City Group, AOL, Time Warner சவதியின் அதிக முதலீடுகளைப் பெற்றுள்ளன.

  இவை படத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களில் சில. இவரது ஆதாரங்களை நிரூபிக்கும் வண்ணம் கனடிய Vision TV, CBC  போன்றனவும் பல ஆதாரங்களை வெளிப்படுத்தின.

  மேற்கூறியவை இவரது புதிய படத்தைப் பற்றி பார்ப்பதற்கு உதவிபுரியும்.

 முதலாளித்துவம் என்பது பெரும் கடல். இதில் எல்லாவற்றையும் ஒரு படத்தில் கூறுவது என்பது எளிதல்ல. இப் படம் யாரை சென்றடையவேண்டுமோ, அவர்களுக்கான கருத்தியலை கூறுவதே அவசியம். சாதாரண அமெரிக்கனும், உலக அமெரிக்க விரும்பிகளும், அமெரிக்காவை சொர்க்க புரியாக பார்க்கின்றனர். ஜெயகாந்தன் போன்ற அறிவிலிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்க இயந்திரத்தை சுற்றி இயங்கும் கோட்பாடுகளை பற்றி முதலில் இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இப் படத்தைப் பற்றி இவரது இணையத்தளத்தில் மைக்கல் மூர் எழுதிய சிறு குறிப்பின் மொழிபெயர்ப்பு இது.

 நண்பர்களே,

 கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுடன் (மற்றைய மதத்தவர்களும் இதனை வாசிக்கலாம் அவர்களுக்கும் இது பொருந்தும்) ஒரு வார்த்தை. எனது புதிய படத்தில் எனது மதநம்பிக்கைகள் பற்றி கூறியுள்ளேன். மத நம்பிக்கை என்பது அவர்களது சொந்த நம்பிக்கை. இதனை அவர்களுடன் வைத்திருக்க வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறுகின்றோம். நாங்கள் ஒரு வன்செயல் நாட்டில் இருந்து மற்றைய நாடுகளை எங்களது சொந்த நலன்களுக்காக சுரண்டிக் கொண்டிருக்கின்றோம். மதமாற்றத்தை எதிர்க்கின்றேன்.

 முதலாளித்துவம் ஓர் பாவமா? யேசு ஓர் முதலாளியா? “யேசு” ஓர் அதிக லாபமீட்டித் தரும் முதலீடா? யேசு கையிருப்பின்றி உடனடியாக வழங்கமுடியாததை விற்பனை செய்தாரா? ஒரு வீதமானோர் பெருமளவு செல்வத்தை அனுபவிப்பதையும், ஏனையவர்கள் அவர்களுக்கு கீழ் இருக்கும் சமூக அமைப்பை யேசு அனுமதித்தாரா?

 முதலாளித்துவம் மதங்கள் கூறியதற்கு எதிரானது. அனைத்து மதங்களும் ஒரு விடயத்தில் தெளிவாக உள்ளள.”ஒரு அப்பத்தில் பெருமளவு தீயவர்களுக்குரியது. மிஞ்சிய ஒரு துண்டிற்ககாக மற்றவர்கள் போட்டியிடவேண்டும்” என்பதே அது.n யேசு கூறிச் சென்றார் “பணக்காரர்கள் சொர்க்கததை அடைய நிறைய கஸ் ரப்படவேண்டும். இல்லாதவர்கள் உதவி செய்யாவிடின் சொர்க்கத்தின் கதவையடைவது கடினம். இது ஓர் துக்கமான செய்தி அமெரிக்கர்களுக்கு. “ஆசிர்வதிக்கப்பட்வர்கள் ஏழைகள்”என்பதே அது. ஓவ்வொரு 7.5 செக்கனும் ஒரு அமெரிக்கருக்கு எதிராக கடன் கட்டாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் 14,000 பேர் வேலை இழக்கின்றனர்.

மதில் வழி(Wall Street) வங்கியாளர்கள் (“ஆசிர்வதிக்கப்பட்ட செல்வந்தர்கள்”) மிக, மிக குறைந்த வரியையே கட்டியுள்ளார்கள். கோல்ட்மன் நிறுவனம் ஒரு வீத வட்டியையே கட்டியுள்ளார்கள். இதனை யேசு அனுமதித்தாரா? இல்லையெனில் இந்த கொடுமையான திட்டத்தை நாம் அனுமதித்தது எப்படி?

 நீங்கள் உங்களை முதாலாளி என்றும் கிறிஸ்தவர் என்றும் கூறலாமா? செல்வத்தில் மீது காதல் கொண்டு, உங்கள் பக்கத்து வீட்டுகாரர் வைத்தியரை பார்;க்க முடியாமல் இருக்கும் பொழுது உதவி செய்யாமல இருக்கலாமா?;, உங்களது வாழ்வு செழிப்பாக இருக்கலாமா? இது ஒரு நெறி கெட்ட வாழ்வு. மற்றவர்களின் கஸ்ரத்தில் உங்களது வாழ்வு என்பது ஓர் பாவப்பட்ட செயல்.

 காலையில் கோயிலுக்கு செல்லும் பொழுது இதனைப்பற்றி சிந்தியுங்கள். நீங்கள் அமெரிக்காவில் கஸ்ரப்படும் லட்சம்,லட்சம் அமெரிக்கர்களில் ஒருவர் எனின் அனைவருக்கும் சுபீட்சம் கிடைக்கும் வரை போராடுவோம்.

 ஒரு பாணை 5000 பேருக்கு சமமாக பங்கிடுவது எப்படி? சுரியாக பங்கிடின் அவர் ஓர் இடதுசாரியாவார். இல்லையெனில் யேசுவின் போதனையை பின் பற்றிய பிழையான சீடராவார்.

 எனது பேச்சை கேட்டமைக்கு நன்றி.

 மைக்கல் மூர்.

படம் ஆரம்பமாக முன்” உங்களது இதயம் உறுதியானதாக இல்லாமல் இருந்தால் அரங்கை விட்டு உடனடியாக வெளியேறவும்” என்ற வாசகங்கள் காட்டப்படுகின்றன.

 தொடரும்…..

 

Exit mobile version