வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை காலை சென்னைக்கும் வட மாவட்டங்களுக்கும் தெற்கு ஆந்திராவுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்பதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது.
இதனால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.