சிவகாசி அருகே இன்று காலை வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 39 பேரை பலிகொண்ட வெடி விபத்து நடந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் மீண்டும் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் கடந்த 5&ம் தேதி நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 39 பேர் உடல் கருகி பலியாயினர். தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்து நடந்து ஒரு மாதம்கூட முடியாத நிலையில் மீண்டும் ஒரு விபத்து இன்று காலை நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (26). சொந்தமாக உரிமம் பெற்று பட்டாசு ஆலை நடத்தி வந்தார். முதலிப்பட்டி விபத்து நடந்ததன் எதிரொலியாக அதிகாரிகள் இவரது பட்டாசு ஆலையில் சோதனை நடத்தினர். அப்போது விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில், செல்லப்பாண்டி தனது வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். விஜயகரிசல்குளத்தை அடுத்த வல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (28), குமார் (45), காளிராஜ் (35) ஆகியோர் இன்று காலை 9.30 மணியளவில் நவீன ரக வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெடியில் மருந்து செலுத்தியபோது திடீரென உராய்வு ஏற்பட்டதில் பட்டாசுகளில் தீப்பிடித்தது. பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரும் உடல் கருகி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சாதாரண பட்டாசு ஆலை உயிரிழப்புக்களை பாதுகாக்க முடியாமல் மக்கள் தொழிலாளர்கள் கருகிச் சாவதை பார்த்துக்கொண்டிருக்கும் இந்திய அரசு, அணு மின் நிலையம் பாதுகாப்பானது எனக் கூறிவருகிறது. இலங்கைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் பாரிய பட்டாசு ஆலை கூடங்குளம்.