Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மிருக பலத்தோடு முதல்வராகிறார் ஸ்டாலின்!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள் தெரிக்கின்றன. அதே போன்று புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ரிபப்ளிக் -சி என் எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக 160 முதல் 170 இடங்கள் வரை வெல்லும் என்றும் அதிமுக 58 முதல் 68 இடங்கள் வரை வெல்லும் ந் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 4-6 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 160 – 172 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 58 – 70 இடங்களும் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்களும் அ.ம.மு.கவுக்கு 2 இடங்களும் மற்றவர்களுக்கு 0- 3 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாடுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக 175 முதல் 195 இடங்கள் வரை வெல்லும் என்றும் அதிமுக 38 முதல் 54 இடங்கள் வரை வெல்லும் என்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமும் மக்கள் நீதி மய்யமும் 2 தொகுதிகள் வரை வெல்லும் என்கிறது இந்த கணிப்பு.
தந்தி தொலைக்காட்சி அதிமுக 68 இடங்களில் வெல்லும் என்றும் திமுக 133 இடங்களில் வெல்லும் என்றும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லும் என எந்தக் கருத்துக்கணிப்பும் சொல்லவில்லை.

Exit mobile version