ஒரு மாநில அரசு, திரும்ப ஒப்படைத்த மின்சாரத்தை, மற்ற மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம், மத்திய அரசிடம்தான் உள்ளது. அத்துடன், தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்கும் வகையில், மின் பரிமாற்ற லைன்களையும் அமைத்து தர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் பதில் மனுவில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது:
‘திரும்ப ஒப்படைத்த கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது. ஏனெனில், டில்லி மாநில அரசு திரும்ப ஒப்படைத்த , மின்சாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என, அசாம், தமிழகம், உத்திர பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தாத்ரா நாகர் ஹவேலி போன்ற மாநிலங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.’
‘மின் தொகுப்பை பலப்படுத்தவில்லைஉபரி மின்சாரத்தை பெறுவதற்கான, மின் தொகுப்பை தமிழக அரசு பலப்படுத்தாததே, தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம்.மேலும், தென்மண்டல மின் தொகுப்பு, கூடுதல் மின்சாரத்தை பெறும் திறன் கொண்டதில்லை. கூடுதல் மின்சாரத்தை பெறும் அளவுக்கு, தமிழக அரசானது, மின் தொகுப்புகளை பலப்படுத்தவில்லை. மேலும், மத்திய அரசிடம் சில மாநிலங்கள் சமர்ப்பிக்கும் கூடுதல் மின்சாரம் எல்லாம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின் தொகுப்புகளின் அடிப்படையில், பகிர்ந்து வழங்கப்படுகின்றன.
எனவே, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு, அம்மாநில அரசே காரணம் என்பதால், அந்த அரச தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, மத்திய அரசின் மனுவுக்கு, தமிழக அரசு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம், 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உலகில் உற்பத்தி வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் சக்தித் துறையும் சமாந்தரமாகவே வளர்ச்சியடைந்தது. உலகமயமாதலின் பின்னர் சீரற்றதாகக் கரமுரடானதாக பரிணாமம் அடைந்த சமூகம், முன்னயை நில உடமையும் பின்னைய நவீனமும் கலந்த அழுக்குக் கலவையாகக் காணப்படுகின்றது. இங்கு மின்சாரம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவதை விட பல்தேசியக் கம்பனிகளின் கொள்ளைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியாவின் அதிகாரவர்க்கமே மின்சாரத் தட்டுப்பாட்டிற்குப் பொறுப்பானவர்கள்.