Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்டுக்களின் மற்றுமொரு வெற்றித் தாக்குதல் !

சட்டீஸ்கர் மாநிலத்தில் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த மத்திய கூடுதல் காவற்படையினரைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய அதி நவீன கண்ணி வெடித் தாக்குதலில் 6 காவலர்கள் உயிரிழந்தனர், 10 பேர் காயமுற்றனர்.

சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூரில் மாவட்டத்தில் தேச நெடுஞ்சாலை 16இல் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைப் பிரிவின் கூடுதல் இயக்குனர் ராம் நிவாஸ் கூறியுள்ளார்.

பசகுடா அவபள்ளி என்ற கிராமத்திலிருந்து பிஜப்பூரை நோக்கி பங்கர் வாகனத்தில் மத்திய கூடுதல் காவற்படையின் 168வது படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் சென்றுக்கொண்டிருந்தபோது, 14வது கி.மீட்டரில் இத்தாக்குதல் நடந்தென ராம் நவாஸ் கூறியுள்ளார்.

தாண்டிவாடா மாவட்டத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 76 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரியத் தாக்குதல் இதுவாகும்.

Exit mobile version