Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவட்ட ஆட்சியர்கள் என்ற உரிமையையும் மாநிலங்களிடமிருந்து பறிக்கும் மோடி அரசு!

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் ஐ.ஏஸ்.எஸ் எனப்படும் மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்திய ஆட்சிப்பணியின் கிழ் இவர்கள் பணி செய்தாலும், ஒரு மாநிலத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரை மத்திய அரசுப்பணிகளுக்கு அழைக்க வேண்டும் என்றால் மாநில அரசின் சம்மதத்துடன் அழைத்துக் கொள்ளலாம் என்பது  இந்திய ஆட்சிப்பணிகளுக்காக 1954-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதி.

இப்போது இந்த விதியை மோடி அரசு மாற்றி மாவட்டங்களில் பணி செய்யும் ஆட்சியர்களை எப்போது வேண்டுமென்றாலும் மாநிலங்களில் அனுமதி இன்றி அழைத்துக் கொள்ளலாம் என்ற வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.மத்திய பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதில் மாநில அரசுகளின் பரிந்துரை இல்லாமலேயே தாமே தன்னிச்சையாக நியமித்துக் கொள்ளும் வகையில் IAS (Cadre) விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்யவுள்ளது.இது பரவலாக அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நள்ளிரவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி , முரசொலி மாறன், டி.ஆர் பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டார்க.  அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய ஆட்சிப்பணிக்கு அழைத்த போது ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்யச் சென்ற போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியின் வருகையை புறக்கணித்தார். அதே போன்று தலைமைச் செயலாளரும் செல்லவில்லை. எனவே பழிவாங்கும் நோக்கோடு தலைமைச் செயலாளரை மத்திய அரசுப்பணிகளுக்கு அழைத்தனர்.  ஆனால் அவரை அனுப்பாமல் மூன்று ஆண்டுகளுக்கு தலைமைச் செயலாளராக நியமித்துக் கொண்டார் மம்தா பானர்ஜி.

தமிழகத்திலும் திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டார்.இந்நிலையில் தான் மத்திய பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதில் மாநில அரசுகளின் பரிந்துரை இல்லாமலேயே தாமே தன்னிச்சையாக நியமித்துக் கொள்ளும் வகையில் IAS (Cadre) விதிகளில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர்.

மாநிலங்கள் தேர்தல்கள் என்ற கட்டமைப்பையே பாஜக அரசு விரும்பவில்லை. மாநிலத்திற்கு ஆளுநர்கள், மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் என்ற கட்டமைப்பை வைத்தே அனைத்தையும் செய்து விடலாம் எனக் கருதுகிறார்கள். இது இந்தியா சிதறிப் போக வழிவகுக்குமே  தவிற ஒற்றுமையை உருவாக்காது.

Exit mobile version