கிளர்ச்சி காரணமாக பதவியை ராஜினாமா செய்த மாலைதீவின் முன்னாள்ஜனாதிபதி முஹமட் நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீடீன் பாரியார் மற்றும் பிள்ளைகள் இன்று காலை, கொழும்பை சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் கொழும்பை வந்தடைந்தனர் எனஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.