எதிர்வரும் புதன்கிழமையன்று பாலித கோஹன விரிவுரை ஒன்றை நிகழ்த்துவதற்காக கனடா, டொரன்டோ பல்கலைக்கழகத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
எனினும் அந்த விரிவுரை, பாதுகாப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மார்கிரட் மெக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கோஹனவின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.
அத்துடன், பாலித கோஹனவுக்கான வீசா அனுமதியை ரத்துச்செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த வருடம் மே மாதத்தில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இலங்கைக்குள் அனுமதி மறுக்கப்பட்டமையையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.