Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலயகத்தை உலுக்கும் டெங்கு நோய் அவலம் : சை.கிங்ஸ்லி கோமஸ்

தலவாக்கலை அக்கரப்பத்தனை பிரஸ் வோட்டர் தோட்டத்தில் பலவருடகாலங்களாக 15 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப் பட்டப் போதும் டெங்கு நோய் பரவுவதற்கான காரணங்களை கண்டறிய முடியாமல் திண்டாடுவது வேடிக்கையான விடயமாகும். : சை.கிங்ஸ்லி கோமஸ்

பாதிக்கப்பட்ட நோயாளர்களில் அதிகமானவர்கள் வேறு பிரதேசங்களுக்கு செல்லாதவர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.இத் தோட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான இவ்வாறாண காரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன

1)தோட்டத்தில் மலசல கூடங்கள் முறையாக கட்டப் படாமை இதிலும் மலசல கூடங்கள் நீர் காணப் படும் சதுப்பு நிலங்களில் கட்டப் படுவது

2)தோட்டங்களிலே தற்காலிக குடியிருப்புக்கள் சமையலறைகள் என்பவற்றிற்கு கூரைகளாக பயன்படுத்தியுள்ள பொலித்தீன் சீட்களில் மழை நீர் தேங்கி நிற்பது

3)தோட்ட கழிவுநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப் படாமை

புதிய பூமி பத்திரிகையின் செய்தியாளர் பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது இனங்கண்ட விடயங்களாகும்

மொத்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார செயற்பாடுகளிலே யாரும் கவனம் செலுத்தாமை,
லாபத்தினை மாத்திரமே கருத்தில் கொண்டு உழைப்பினை சுரண்டும் தோட்டக் கம்பனிகள்,  சந்தா பணத்திற்கும் வாக்குகளுக்கும் மாத்திரம் தோட்டத் தொழிலாளர்களை நாடிச் செல்லும் தொழிற்சங்கங்கள்,  மலையக மக்களின் வறுமையை படம் பிடித்துக் காட்டி கோடி கோடியாய் பணம் தேடும் அரச சார்பற்ற நிருவனங்கள்,  நாட்டிற்காய் உழைக்கும் தொழிலாளர்கள் நலன் மீது அக்கறைக் கொள்ளாத அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நலன் மீது அக்கறைக் கொண்டால் எமது பதவி போய் விடும் என்ற பயத்தில் தோட்டத்து பக்கம் திரும்பிப் பார்க்காத உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் , உறுப்பினர்கள்,  அதிகாரிகள்,  ஊள்ளுராட்சி சட்டங்களை இயற்றிய போது வஞ்சகமாக தோட்டத் தொழிலாளர்களை புறக்கணித்த கயவர்கள் தலை முறை தலைமுறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை வழங்காமல் வெறும் சலுகைகளை மாத்திரம் காட்டி ஏமாற்றிவரும் நயவஞ்சகர்களும்டெங்கு நோய் மாத்திரம் அல்ல இன்னும் பல நோய்கள் பரவுவதற்கு காரனமானவர்கள் என்றால் மிகையாகாது.

Exit mobile version