கிரேக்கத்தில் மருந்துக் கடைகளில் வினியோகம் 90 வீதத்தால் குறைவடைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரேக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னதாக மருந்து நிறுவனங் குறைவான விலையிலேயெ வினியோகத்தை மேற்கொள்ளுமாறு கிரேக்க அரசுடன் உடன்பாட்டிற்கு வந்திருந்தன. இக் குறைந்தவிலை மருந்துகள் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கும் குறைவான விலையில் விற்கப்படலாம் என சில நாட்களாக மருந்து நிறுவனங்கள் கூறிவந்தன. திடீரென அவை மருந்து வினியோகத்தை நிறுத்திவிட்டன.
இதனால் மருந்துக்கடைகளில் நீண்ட வரிசைகளில் எஞ்சிய மருந்துவகைகளை வாங்குவதற்காக மக்கள் காத்ட்திருக்கிறார்கள்..
தமது பண வெறிக்காக அப்பாவிப் பொதுமக்களை அழிக்கும் இவர்கள் கிரக்க நாட்டையே பணயம் வைக்கத் துணிந்துள்ளனர்.
பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலால் அழிவின் விழிம்பினுள் சென்றுகொண்டிருக்கும் ஏனைய நாடுகளுக்கும் இதே நிலைமை தோன்றும் காலம் வெகுதொலைவிலில்லை.