மருத்துவர் சிவசங்கர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிவான் என்.கணேசராசா சிவசங்கரை விடுதலை செய்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றி வந்த சிவசங்கர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கொக்காவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் ஊடாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மருத்துவர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு சென்று இராணுவத்தினரிடம் முரண்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த யுவதி ஒருவர் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகத் தெரிவித்திருந்த நிலையில் குறித்த யுவதியின் பெற்றோருடன் டாக்டர் சிவசங்கர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு சென்று படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போதே அவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
சிவசங்கர் கைது தொடர்பாக பல சந்தேகங்கள் நிலவின. கொழும்புசார்ந்த மருத்துவர்களும் ஏனைய அரசியல் லும்பன்களும் தமது தனிப்பட்ட நலன்களுக்காக சிவசங்கர் மீர்தான போலிக் குற்றங்களை முன்வைத்தனரா என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.
காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்
சிவசங்கர் கைது, இலவசக் கல்விகற்ற மருத்துவபீட மாணவர்கள் எங்கே?
மருத்துவர் சிவசங்கர் எங்கே?