இனியொருவின் அடிப்படைக் கருத்துக்களோடு முரண்பாடுகளைக் கொண்ட கட்டுரைகள் ஆவணப்படுத்தும் நோக்கோடும் விவாத நோக்கோடும் ‘முரண்’ பகுதியில் வெளியிடப்படும். இப் பகுதியில் வெளியாகும் செய்திகள் அவற்றின் முழுமையான பின்புலத்தோடு கூடியவை அல்ல.
மற்றவர் உலகம் தலைவணங்கும் அரசியல்வாதி.
ஒருவர் இந்தியாவின் விடுதலையையையும் சமாதானத்தையும் கனவு கண்டவர்.
மற்றவர் தென் ஆபிரிக்காவிற்கு விடுதலையையும் பெற்று உலக சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர்.
இருவரும் வாழ்ந்த காலங்களும் வாழ்ந்த வயதுகளும் மிகவும் மாறுபட்டது. இரண்டு காலங்களிலும் உலக அரசியலின் நிலைப்பாடுகளும் வேறுவேறானவையே.
மண்டலேவின் மொழி பேச்சாய் இருந்தது. இசையும் நாட்டியமும் அவருக்கு இயற்கையிலேயே இருந்தது. அதில் அரசியல் மட்டும் இருந்தது. அத்துடன் அரசியல் பின்பலமும் இருந்தது. எனவே மக்களை இலகுவில் சென்று அடையக் கூடியதாய் இருந்தது.
இளமையில் ஒரு சுதந்திர போராட்ட போராளியாக தன்னை உருவாக்கிக் கொண்ட அவர் சரியான வேளையில் முழுக்க முழுக்க அரசியல் தீர்வில் நம்பிக்கை கொண்டு அதனுடன் கைகளைக் குலுங்கிக் கொண்டார். சுதந்திரத்திற்கான போராட்ட வடிவங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சரியான தருணத்தில் உணர்ந்து செயல்பட்டதால், எந்த வெள்ளையரின் சமுதாயம் 29 ஆண்டுகள் அவரை சிறையில் அடைத்ததோ அந்த சமுதாயம் கலந்து கொண்டு அவரின் மரணச் சடங்கைச் சிறப்பித்தது அவரின் அரசியல் ஆளுமையையும் தனி மனித ஆளுமையையும் உலகத்திற்கு உணர்த்தியது.
பாரதியின் மொழி எழுத்தாய் இருந்தது. அவனது சிந்தனை பல திசைகளில் இருந்தது. ஆன்மீகம் – சமத்துவம் – இந்தியச் சுதந்திரம் போன்று பல திசைகளையும் சிந்தித்தான். அரசியலில் அவர் தலைவராய் இருக்கவில்லை. ஆனால் பல தலைவர்களின் போராட்டங்களுக்கு தன் பேனாவால் பின்பலம் சேர்த்தார்.
அரசியலைத் தவிர்த்து தான் வாழ்ந்த சமூகத்தில் பெரியதொரு மாற்றுச் சிந்தனையை முன் வைத்தான். அது பலரால் ஏற்க முடியாது இருந்தது. பார்ப்பன வீட்டில் பறையருக்கு சமபந்திப் போஜனம் நடாத்துவது என்பது இன்று கூட இலகுவில் நடக்க கூடிய காரியம் இல்லை.
பெரியாரின் போராட்டம் சாதியத்துக்கு எதிராக இருந்த பொழுது அதில் மறைந்திருந்தது பார்ப்பனியத்திற்கும் மூடக் கொள்ளைகளுக்கும் எதிரானனாகவே இருந்தது. ஆனால் பாரதி பிராமண குலத்தில் பிறந்ததாலோ என்னவோ அவரால் சாதீயத்திற்கு எதிரான ஒரு இயக்கத்தை தோற்ற முடியாது போயிற்று. ஆனால் அவன் படைத்த படைப்புகள் அவன் இல்லாத காலத்தில் உயிர்வாழ்வதனால்தான் அவனை இன்றும் வாழ்த்துகின்றோம்.
எதுகையும் மோனையும் தான் கவிதை இலக்கணம் என தமிழ்; பண்டிதர்களின் தலைப்பாகையில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருந்த பொழுது அதனை உருவி தனது இடுப்பில் கட்டிக் கொண்டு பெரியமாற்றத்தைக் கொண்டு வந்து புதுக்கவிதைக்கு வித்திட்டவன் பாரதி.
அவன் கவிதைகளில் சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் குறிப்பாக பெண்விடுதலைக்கான கருத்துகள் ஆனமிகக் கருத்துகள் அவன் தமிழில் இருந்து பொறியாகப் பறந்தது.
அவ்வாறே அவன் பாவித்த மிக எளிமையான உதாரணங்கள்:
”தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – உனைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” இதனை விட எளிதாகவும் பலமாகமும் யாரால் கண்ணனுடன் உள்ள உறவைச் சொல்லி விட முடியும்?
தசையினைத் தீச்சுடினும் சிவ சக்தியைப் பாடும் வரம் கேட்பேன் என வலிகளில் இருந்து அவன் தமிழ் உயிர் பெற்று எழுந்தது.
தமிழின் இனிமையைச் சொல்லும் பொழுது நாக்குடன் சம்மந்தப்பட்டதேனை ”தேன் வந்து பாயுது காதினிலே” என அவன் ஆரம்பித்த படிமங்கள் இன்று உள்ள கவியரசுகளுக்கும் கவிச்சக்கரவர்த்திகளுக்கும் புதிய பதிய திசைகளில் சிந்தனையைக் கிளறிக் கொள்ள உளவாரங்களாகின.
கண்ணனைக் கர்ப்க்கிரகத்திலும் பூஜை மாடங்களிலும் வைத்து அனைவரும் வணங்கிக் கொண்டு இருந்த பொழுது அவனை அரசன், சேவகன், தாய், தகப்பன்; , காதலன், காதலி, குழந்தை என பல்வேறு வடிவங்களில் வைத்து கவிதை புனைந்தவன் பாரதி. இந்த வகையாக எழுத்துச் சிந்தனை நடை பின்னாளில் பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளிலும் அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது தங்களை பாரதியின் தாசன்களாக புனை பெயர் சூட்டிக் கொண்டார்கள்.
இத்;தனை பெருமைக்கும் காரமாக விளங்கும் பாரதி தான் வாழ்ந்த காலத்தில் மதிக்கப்படவில்லை என்பது தான் வரலாற்றுச் சோகம். ஆனால் பாரதியோ நான் அழிய மாட்டேன் என்று சொல்வது அதில் அவரது அழுத்தமான நம்பிக்கை நமக்குப் பரிதாபம் கலந்த ஒரு புன்சிரிப்பைத்தான் தருகிறது. அதிலும் இளம் வயதிலே-39 வயதில் அவர் இறந்துபோனதை நினைத்தால் இந்தச் சோகம் இன்னும் அதிகரிக்கிறது. இது ஒரு அவலமுரண் (tragic irony) என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் சமுதாயத்தில் முன்வைத்த சிந்தனைகள், மாற்றுக் கருத்துகளை உலகம் ஏற்று பெருமை கொள்ளும் பொழுது அவனின் 39 வருட வாழ்வு அர்த்தப்படுகிறது.
மண்டேலாவின் கருத்துகளை அவர் வாழ்நாளில் உலகம் ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும், பாரதியின் கருத்துகள் அவர் வாழந்த் காலத்தில் சமுதாய யானைகளிளால் மிதிக்கப்பட்டுப் இறந்து போனாலும் இன்று உயிர்தெழுந்ததையும் ஒப்பு நோக்கினால் முண்டாசுக் கவிஞனுக்கு முறுக்கு கொஞ்சம் அதிகம் என்பதை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்
V. Jeevakumaran
Højvangsparken 7
4300 Holbæk
Denmark
0045 – 59 46 45 47
0045 – 28 77 45 47