Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மம்தா பானர்ஜி தொகுதியில் இன்று இடைத்தேர்தல்!

மேற்கு வங்க மாநில முதல்வராக நீடித்திருக்க மம்தா பானர்ஜி வென்றாக  வேண்டிய பவானிபூர் இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது.

கடந்த  மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். மம்தா வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக  மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த சூழலில் மம்தா முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி  தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பவானிபுர்  இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தல் இன்றும் (செப்.30), வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.

மம்தாவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் அவரது  முதல்வர் பதவியை தீர்மானிக்கும் தேர்தல். மம்தாவை பதவியில் இருந்து அகற்றி விட்டால் பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்கலாம் என நினைக்கிறது.

Exit mobile version