Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம் காங்கிரஸ் அறிவிப்பு!

மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நந்திராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோற்கடிக்கப்பட்டார்.  முதலில் அவர் வென்றாக அறிவித்து விட்டு பின்னர் அவரை எதிர்த்து போட்டியிட்டவர் வென்றதாக அறிவித்தார்கள்.

மம்தா பானர்ஜி தோற்றாலும் அவர் கட்சி பிரமாண்ட வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. மம்தா பானர்ஜி முதல்வர் ஆனார். ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றாக வேண்டும் என்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் பவானிபூர் உட்பட  3 தொகுதிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பாஜகவுக்கும் மம்தாவுக்கும் இடையில்  நேரடிப் போட்டி நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சி மறைமுகமாக அவரை ஆதரிக்கும் விதமான பவானிபூர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது காங்கிரஸ்.

ஆனால் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியினர் மம்தாவுக்கு ஆதரவாக பணி செய்ய மாட்டார்கள். என்றாலும் பாஜகவிடம் விலை போகாமல் இருந்தால் மட்டுமே மம்தா பானர்ஜி வெல்ல முடியும்.

பவானிபூர் இடைத்தேர்தல் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் உள்ள தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version