என் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக பிரதமர் மன்மோகன் சிங்கும் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சிபிஐ க்குப் பரிந்துரை செய்தது. இதையடுத்து சி.பி.ஐ தரப்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.ஐ.யின் எந்தப் பிரிவு பிரதமரின் மீதான இந்த குற்றசாட்டை விசாரிக்க உத்தரவிடலாம் என்று ஆலோசனை நடத்தியதாகக் கூறப் படுகிறது.
எது எவ்வாறாயினும் மன் மோகன் சிங் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்பதை சி.பி.ஐ உறுதிசெய்துள்ளது.