குளிகால கூட்டத்தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பினார்கள்.
நேற்று குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதும் வேளாண்சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்ட போதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் கடந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷமிட்டதாகக் கூறி 12 எம்.பிக்களை அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை விதித்து சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர். இதனை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் காந்தி சிலை அருகில் போராட்டம் நடத்தினார்கள். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு உறுதியாக தெரிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளவர்கள் மன்னிப்புக் கேட்டால் தடை குறித்து பரிசீலனை செய்வோம் என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மக்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா..? மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று ராகுல் காந்தி இந்தியில் பதிவிட்டுள்ளார்.