Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மதவாத சக்திகளுக்கு ஒரு போதும் அடிபணியமாட்டேன் – லாலுவின் முதல் கூட்டம்!

மாட்டுத்தீவன வழக்கில் சிறை சென்ற லாலுபிரசாத் யாதவ் பல ஆண்டுகால சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை ஆனார். அரசியலில் மாணவர் தலைவராக உருவானது முதல் இன்று வரை எப்போதும் மதவாத எதிர்ப்பாளராக  இருந்து வரும் லாலு பிரசாத் யாதவ் எப்போதும் தன் கொள்கைகளை எதற்காகவும் மாற்றிக் கொண்டதில்லை.

மசூதி இடிப்பின் முன்னர் அத்வானியின் ரத யாத்திரை இந்தியா முழுக்க கலவர நெருப்பை பற்ற வைத்த போது பிகார் முதல்வராக இருந்தவர் லாலு அத்வானி பீகாருக்குள்  நுழைந்தால் கைது செய்வேன் என்றார். சொன்னது போல அத்வானியை கைது செய்து ரதயாத்திரையை முடக்கினார்.

கலவரங்களில் கொல்லப்பட்ட முஸ்லீம்களுக்கு ஆதரவாக நின்றார். சுமார் ஆறு ஆண்டுகளாக பொது  நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத லாலு முதல் முறையாக  ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பரப்புரைக்கூட்டத்தில் பங்கேற்றார். தாராபூர் என்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது அந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த லாலு “மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கும் மத வாத சக்திகளுக்கு நான் ஒரு போதும் அடிபணிய மாட்டேன்.மோடி ஆட்சிக்கு வந்த இந்த ஏழு ஆண்டுகளில் மக்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்கிறார்கள். எந்த வளர்ச்சிப்பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பீகார் மக்கள் தேஜஷ்வி யாதவிற்கே வாக்களித்ததாகவும், நிதிஷ்குமார் ஏமாற்றி சதி செய்து ஆட்சியை கைப்பற்றியதாகவும் தெரிவித்தார். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பரப்புரை மேற்கொண்ட லாலு பிரசாத்தைக் காண ஏராளமானோர் கூடினர்.

இந்தியாவில் மதச்சார்பின்மை கேள்விகுள்ளாகிவரும் ஒரு காலச்சூழலில் லாலு இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதோடு இன்றளவும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக இருக்கிறார்.

Exit mobile version