அமரிக்காவின் நாசா ஆராச்சி நிலையம் இதனால் இளைஞர்கள் தற்கொலை மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருப்தாகவும் பல குழந்தைகளின் ஆழ்மனதில் பய உணர்வும் விரக்தியும் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
மத்தியதர வர்க்கத்தின் குப்பை மேடு போன்ற சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இதற்கான பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்தியது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அமரிக்க ஐரோப்பிட பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஒத்திவைக்கும் நோக்குடன் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
சீனாவில் உலக அழிவு நாளில் தங்கியிருப்பதற்கு என பாதுகாப்பு உருண்டைகளை புதிய பணக்காரர்கள் வாங்கி வருகிறார்கள்.
இந்தியாவில் யேசு ஜீவிக்கிறார் போன்ற கிறீஸ்தவ அமைப்புக்கள் மாயன் உலக அழிவு வதந்தியைப் பயன்படுத்தி தமது குழுக்களுக்கான ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மாயன் கலண்டரின் அடிப்படையில் புதிய சூரியன் இன்னும் 5200 வருடங்களுக்கு உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறுவதாக மத்திய அமரிக்காவில் இன்னும் மாயனை பின்பற்றும் குழுவின் தலைவர் கூறுகிறார். அதில் எப்போதும் உலகம் அழிவதாகக் கூறப்படவில்லை என்கிறார்.