Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களாட்சியின் பெயரால் நடக்கும் ஊடகவியல் கொலைகள்:ரஃபேல்

லசந்த விக்கிரமசிங்க படுகொலை செய்யப்பட்டதனால் அனைத்தையும் மூடிமறைக்கலாம் என்று எண்ணுபவர்கள் தாராக்கி சிவராம் கொல்லப்பட்டபோதும் அவ்வாறே நினைத்தார்கள். இலங்கை ஊடகத்துறை போலவே இலங்கைக்கு வெளியேயும் வாழ்பவர்கள் ஊடகம் நடத்துவதும் மிகவும் சிக்கலானது.

சிவராம் படுகொலை தொடர்பான கண்டனக்கூட்டம் ஒன்று கனடாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோது ‘பத்திரிகையாளர்கள் பணி மிகவும் சிக்கலானது. அதிலும் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பணியாற்றுவது மிகவும் துணிச்சல்மிக்க செயல். அந்த வகையில் பத்திரிகையாளராக தொடர்ந்தும் இலங்கையில் இருந்து செயற்பட்டதே மக்களுக்காக சிவராம் (TARAKI – Siavaram) வாழ்ந்தார் என்பதற்கு அறிகுறி” என;று குறிப்பிட்டிருந்தேன். கருமையம் அமைப்பினர் ஒழுங்கு செய்த கூட்டத்தில் இந்தக் கருத்து கூறப்பட்டது. ஆனால் அது வேறு ஒருவரின் பெயரில் எழுத்தில் தவறாக மாறிப் பதிவாகியிருந்தது வேறுவிடயம்.

அதைப்போன்றதே அதற்குச் சமமமானதே சண்டே லீடர் பத்திரிகையின் லசந்த விக்கிரமசிங்கவுடைய (Lasantha Wickrematunga)கொலையும் அது சுட்டியிருக்கும் அவரது பணி குறித்த வெளிப்பாடு;ம.

லசந்த விக்கிரமசிங்க தராக்கி சிவராம் போன்றவர்கள் மக்களுக்காக வாழந்து மறைந்தவர்கள். அவர்களைக் கொன்றவர்கள் மக்களின் எதிரிகள். மக்கள் நலனை சிறுதும் விருமபாதவர்கள். நாங்கள் நுணுகிய அரசியலை எப்போதும் நூல் பிடித்துப் பேசிக்கொண்டிருக்கையில் பெரிய தவறுகள் நடந்து முடிந்து வரலாறு நம்மையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஊசிபோவதைப் பார்த்துக் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறோம். உலக்கைகள் எழுந்து நின்று தாண்டவமாடுகின்றன.

சுயநலம் மிக்க படைப்பாளிகள் எழுத்தாளர்கள் தங்கள் பிழைப்புக்காக மட்டும் கோஸ்டி சேர்ந்து செய்யும் சிறுபிள்ளைத்தனங்கள்தான் உண்மையில் மக்களின் பிணங்களைக் குவிக்கின்றன. உண்மையில் சிங்களத்தரப்பிலும் தமிழர் தரப்பிலும் பிணங்கள் குவிவதற்கு போர் நடத்துபவர்களைவிடவும அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரப்பவர்களதான் காரணம். இந்தியக் குற்றவியல் சடட்டத்தில் ஓர் கொலையைச் செய்தவரைக் காட்டிலும் அதை ஊக்குவித்தவரை அதைத் திட்டமிட்டவரை அதிகமாகத் தண்டிக்க வழியிருக்கிறது.

அதையே இங்கும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கையில் மகிந்தவுக்காக துதிபாடும் கும்பல்களை என்னவென்பது.

ஓர் பத்திரிகையாளருக்கான மறைவில்கூட இரக்கம் வராமல் கல்நெஞ்சர்களாக இருக்கும் சில ஊடகங்கள் மக்களை நேசிப்பதாகப் பாசாங்கு செய்வதும் புழுகுவதும் அதிகமாகியிருக்கிறது.

மாற்றுக்கருத்துக்களை உள்ள பல்வேறு தரப்புக்களின் பக்கங்களை உள்ளடக்கிய ஓர் செலவ குறைந்த ஊடகத்தை; திட்டமிட்ட சில நண்பர்கள் தங்களளவில் பயந்துகொண்டி தாமதிப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களின் பயம் எந்த அரசுக்கும் அதன் உளவுப் பிரிவுக்கும் அல்ல. ஏனெனில் அவர்கள் முன்வைக்கப்போவது பலதரைப்பையும்தான்.
ஆனால் இன்று மாற்றுக் கருத்து முகாமுக்குள் முகாமிட்டிருக்கும் ‘மற்றக்’கருத்தாளர்கள் தங்களை முத்திரை குத்தி காட்டிக்கொடுப்பார்களோ என்ற பயத்தில் புலம்பெயர்தந்த இடத்தில பயம் தரும் நிலையை எமது அறிவு சீவி பல்தரப்புக் கருத்துரையாடல் தளம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

லண்டனில் ஊடகத்தை உடைத்தால் அது செய்தி. ஓர் ஊடகம் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கே அதை தொடர்ந்து பயன்படுத்தி வரமுடிகிறது. ஆனால் கொழும்பில் அரசுக்கு புறம்பாக மறுத்தோடிக்கொண்டிருந்த ஓர் ஊடகம் சின்னாபின்னமாக்கப்பட்டதைப்பற்றி எவ்வித சுரணையான கருத்துரையாடல்களும் நமது ஊடகங்களில் நடைபெறவில்லை என்பதையும காணக்கூடியதாக இருந்தது.

லசந்தவின் கொலை நடந்து முடிந்ததும் வந்த செய்தி கண்ணில்டுவதற்கு முன்னரே அத மறைக்கும் வகையில் மகிந்த அந்தக் கொலையை கண்டித்த செய்தியை வெயியிடும் ஓர் ஊடகத்தை என்னவென்று சொல்வது.

எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு (Reporters Without Borders) – பிரான்சில் மையமாகக் கொண்டு செயற்படுவது இந்த ஆண்டின் முதற் கொலையாக அறிவித்திருப்பது மதிப்பிற்குரிய மகிந்த அரசாங்கத்தின் தலைநகரின் உலகறியப்பட்ட பத்திரிகையின் ஆசிரியரான லசந்த கொல்லப்பட்டதைத்தான் என்பதை எமது சுயநலப் பத்திரிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

யாருடைய மறுப்பையும் வெளியிடலாம். ஆனால் அதற்கான நோக்கம் குறுகியதாக இருக்கையில் சிறுபிள்ளைத்தனமாக பத்திரிகையியல் என்ற பெயரில் விளையாடும் போக்கிரித்தனம் தெரிகிறது.

முடிவாக ஒரு மேற்கோளைச் சொல்லாம்.

கொழும்பில் மனித உரிமைகளுக்கான அமைப்பாளராகவும் சனநாயக மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் மனோ கணேசன் (Mano Ganesan)தெரிவித்த கருத்து ஒன்று. இதற்கு ஏன் முதன்மை தரமுடிகிறது என்றால் இவரும் மக்களுக்காக கொழும்பில் தனது தொகுதி மக்களிடையே வாழ்கிறார்.

‘எதாவது தாக்குதல் ஆட்கடத்தல் கொலை நடந்துவிட்டால்  சிறிலங்கா அரசு விழுந்தடித்துக்கொண்டு தன்னைத் தவிர மற்ற அனைவரையும குற்றம் சுமத்துகிறது. இது எவ்வளவு வேடிக்கையானது பாருங்கள். கொழும்பில் ஒவ்வொரு 300 மீற்றருக்கும் ஒவ்வொரு சந்தியிலும் பாதுகாப்பு அதிமாக உள்ள இடங்களில் ஒவ்வொரு 100 மீற்றருக்கும் சென்றிகள் இராணுவ காவல்துறைத் தடுப்புகள் உள்ளன. இதை அனைவரும் அறிவர். அப்படியிருக்கையில் இந்தக் கொழும்புக்குள் நுழைந்து அரசுக்கு தெரியாத அல்லது அரச படைகளுக்கு தெரியாத இந்தக் கொலைகள் ஆட்கடத்தல்கள் மக்கள் காணாமல்போதல்கள் எவ்வாறு நடைபெறக்கூடும்.

முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டிய அராசங்கத்தின் தலைவர் வலுக்கட்டயாமாக செய்தி ஊடகத்துறையை தன் கைக்கு எடுத்துக்கொண்ட சிறிலங்காவின் அதிபர் மறுப்புரையும் கண்டனமும் வெளியிடுகிறார்.

இறந்த பத்திரிகையாளனின் குருதி காய்வதற்குள் அந்தச் செய்தியை மறைக்கும் வண்ணம் இந்தப் பிதற்றலை வெளியிடுகிறது ஓர் ஊடகம். அதை நாங்கள் நம்ப வேண்டும்.

லசந்த, தாராக்கி மட்டுமல்ல இலங்கையில் இறந்த இறக்கின்ற இறக்கப்போகும் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் ஊடகக்காரர்களையும் அவர்களின் குடும்பத்தி;னர் வாழ்வையும் இந்த நிலைக்குக் கொண்டுவருவது பொறுப்பற்ற ஊடகம் நடத்தும் அறிவுசீவிகள்தான் என்பதே உண்மை.

— — — — — —
சில அரசியல் உள்நோக்கங்களை வைத்து இந்தியாவின் முதன்மையை இலங்கையில் விலயுறுத்த நினைத்து செய்றபடும் கவிஞர் செயபாலன் இந்தியாவின் மக்களாட்சியின் வெற்றி என்பது அதன் நீதித்துறையும் ஊடகமும் சுதந்திரமாகச் செயற்படுவதுதான் என்று தனது அண்மைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கருத்தின் நோக்கத்தையும் தேவையையும் இலங்கைத் தமிழர் சார்ந்து மறுப்பதற்கில்லை.

அந்தச் செய்தியின் அச்சு மை காய்வதற்குள் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவின் மீதான தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இது ஒன்று மட்டுமேயல்ல.
அதே போலவே இந்தியாவில் சட்டமும் அல்லது நீதித்துறையும் ஊடகமுமம் சுதந்திரமாகச் செயற்படுவது என்பது வெளிக்குத்தான்.

உள்ளுக்குள்ளாக அவற்றுக்கான மட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமாக இருக்கின்றன.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஊடகத்துக்கும் இருக்கும் அதன் நிர்வாகிகிள் இந்தியாவின் கட்டுப்பாடுகள் என்னவோ அதன் தேவை அறிந்து குறிப்பாகச் செயற்படுகிறார்க்ள.

நீதியும் அவ்வாறே. பல இடங்களில் தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுதல் ஆவணப்படுத்தப்படுகிறது. பட்டுள்ளது.

பிரான்சிஸ் கிருபாக்கள் தவிர்க்க இந்தியாவில் முடியாதவர்கள். திருமங்கலம் இடைத்தேர்தல் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரையே (சட்டத்தை உருவாக்கும் மையத்தின் உறுப்பினர்) காவல்துறை புடைத்துத் காயப்போட்டிருக்கிறது.

ஆக இந்தியாவிலும் அது கண்துடைப்பு என்ற அளவில் தான் சுதந்திரமாக உள்ளது.

——-

2002 இல் எல்லைகளற்ற பத்திரிகையளார் அமைப்பின் அறிக்கை அரசு நிர்மலராஜனின் கொலையாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு முனைப்பு காட்டவில்லை என்று சுட்டுகின்றது.

அன்றிலிருந்து இன்று 2009 வரை இவ்வாறான ‘பெருமதிப்பிற்குரிய” குறிப்புக்களை எல்லைகளற்ற பத்திரிகையளார் அமைப்பின் அறிக்கை அவ்வப்போது சிறிலங்காவுக்கு வழங்கி வருகிறது.

அந்தப் பட்டியலில் சிவராம் பற்றிய குறிப்பு இடம் பெற்றாயிற்று. தற்போது லசந்தவின் கொலையும் சேர்ந்து கொண்டது. இந்தக் கொலையிலும் கொலையாளிகள் கண்டுபடிக்கப்படமாட்டார்கள் என்பதன் முன்னோடிதான் மகிந்தவின் கண்டன அறிக்கை. அந்தப் பெருமையின் பங்கு அதை முனைப்புடன் வெளியிட்ட ஊடகத்துக்கும் கிடைக்கவேண்டும்.

Exit mobile version