ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் ஆரம்பித்து கருணா குழு வரைக்கும் மைத்திரி புகழ்பாடுகின்றன. மகிந்த ஆட்சியிலிருந்த போது தமக்கு வேறு வழி தெரியவில்லை என்று இச் சமூகவிரோதிகள் தம்மை நியாயப்படுத்திக்கொள்கின்றனர். மைத்திரி கூட இப்படித்தான் தன்னை நியாயப்படுதுகிறார்.
இதில் மிகப்பெரும் வேடிக்கை என்னவென்றால் மகிந்த ஆட்சியின் போது மகிந்தவால் உருவாக்கப்பட்ட துணைக்குழுக்கள் கூட இன்று மகிந்த எதிர்ப்பு ஜனநாயகவாதிகளாகிவிட்டனர்.
புலம்பெயர் நாடுகளிலிருந்த சமூகவிரோதக் கும்பல்களை இணைத்து மகிந்த அரசால் உருவாக்கப்பட்ட குழுக்கள் கூட இன்று மகிந்த எதிர்ப்புப் புராணம் பாட ஆரம்பித்துள்ளன.
வன்னிப்படுகொலைகளின் போது உருவாக்கப்பட்டு அலவத்துள் வாழ்ந்த மக்களைச் சூறையாடிய சிறீ ரெலோ என்ற குழு இன்று மகிந்தவிற்கு எதிராகப் பேச ஆரம்பித்துள்ளது. மைத்திரிபால ஜனநாயகத்தை மீட்டதாகக் கூறுகிறது. வன்னிப் படுகொலைகளின் போது மகிந்த – டக்ளஸ் இணைந்து உருவாக்கிய கொள்ளைக் கூட்டமே சிறீ ரெலோ என்ற அமைப்பு.
மகிந்த பேரரசு கோலோச்சிய காலத்தில் இராணுவத்தோடு இணைந்து செயற்படுவதே தமது அரசியல் எனப் பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றில் கூறிய சிறீ ரெலோ உறுப்பினர்கள் இன்று மகிந்த சர்வாதிகாரத்திற்கு எதிரான ‘ஜனநாயகத்தினுள்’ நுளைந்துகொள்கிறார்கள்.