Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்:விக்ரமபாகு

Wickramabahuவெளிநாட்டு சக்திகள் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றும் நிலை உருவானால், நாட்டின் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட நேரிடும் எனவும் இதனால் அதற்கு முன்னர் உள்நாட்டு சக்திகள் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இன்றைய அரசாங்கத்தை பாதுகாப்பது என்பது நிறைவேற்று அதிகாரத்திற்கும் அப்பால் சென்ற பாசிசவாதம் உருவாக இடமளிப்பதாகும். ராவணா பலய, பொதுபல சேனா போன்ற அமைப்புகளை வீதியில் இறக்கி அரசாங்கம் தனது தேவையை நிறைவேற்றி வருகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க இனவாதமற்ற பொது வேட்பாளரை தேடுவது சிரமமானது. நம்பிக்கை வைக்கக் கூடிய தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.
அதேவேளை 88ம், 89ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளுக்கு ஜே.வி.பி மன்னிப்பு கோருவது கேலிக்குரியது. அவர்கள் கொண்டிருந்த தவறான கொள்கை தொடர்பிலேயே ஜே.வி.பியினர் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு விக்ரமபாகு கருணாரத்ன தேரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச என்ற பேரினவாதிக்குப் பதிலாக மற்றொரு பேரினவாதியான ரனில் விக்ரமசிங்கவைப் பதவியிலமர்த்த முற்படும் விக்ரமபாகு கருணரத்ன மக்களிடம் மன்னிப்புக்கோரும் நிலை உருவாக வேண்டும்.

Exit mobile version