29ம் திகதி ஓகஸ்ட் மாதம் மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்திற்குச் சென்ற அதுல சில மணி நேரங்களின் பின்னர் அம்புலன்ஸ் ஒன்றில் கொழும்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அதுல மரணமானார். மரணமான மறுநாளே பிரேதசப் பரிசோதனை இன்றி அவர் அடக்கம் செய்யப்பட்டர்.
லொக்கு அதுல ரெம்பிள் ரீ அலுவலகத்திற்கு 29 திகதி மாலை 7:30 இற்குச் சென்ற போது அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு தனி அறை ஒன்றிற்குள் மகிந்த பசில் ஆகிய இருவரும் அழைத்துச் சென்றனர் என பெயர் குறிப்பிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
லொக்கு அதுலவின் மரணம் கொலையே என லங்கா ஈ நியூஸ் இணையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
மேற்குறித்த தகவல் தனி ஒருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படதால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் அவர் தெரிவிக்கையில் மகிந்த மற்றும் பசில் ஆகியோர் தாக்கியதால் மரணம் சம்பவித்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
அதுல சுகதேகியாவே இருந்தார் என்றும், அதுவரை அவர் எந்த சுகயீனத்திற்கும் மருத்துவம் செய்துகொள்ள்வில்லை எனவும் லங்கா ஈ நியூஸ் மேலும் தெரிவிக்கிறது.
ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிரக முளைத்திருக்கும் எதிரணி நம்பிக்கை தருவதல்ல. இலங்கையில் மக்கள் புரட்சி ஒன்றி ஊடாகவே அதிகாரத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்று பேரினவாதிகளும், சர்வாதிகாரிகளும் அரசியல் பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர்.