தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பினை அடுத்து, ஜனாதிபதி தேர்தலில், மஹிந்தவுக்கே ஆதரவளிக்கப்போவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அறிவித்துள்ளார்.எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகவை விட மஹிந்த நல்லவர் என குறிப்பிட்டிருப்பதுடன், தொடர்ந்து ஜனாதிபதியுடன் நல்லுறவை பேணிக்கொண்டிருப்பதாலும், அதனை நீட்டிக்கொண்டு செல்வதினூடாக நிர்வாக பிரச்சினைகளை தீர்த்து தமது கிழக்கு மாகாணத்தை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்பதாலும் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், மஹிந்தராஜபக்சவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.